தொழுகையை ஜமாஅத்துடன் தொழுவதன் முக்கியத்துவம்!

தொழுகையை ஜமாஅத்துடன் தொழுவதன் முக்கியத்துவம்!

தொழுகை என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் தலையாய கடமையகாகும். இந்த தொழுகையை ஆன்கள் கண்டிப்பாக ஜமாத்துடன் தொழ வேண்டும். அதிகமான நன்மைகள் உண்டு என்பதை அறிந்திருந்தும் இன்று நாம் எந்த காரணமும் இல்லாமல் வேலை அதிகம் என்றும் அசதி என்றும் காரணங்கள் கூறி ஜமாத்தை விட்டு விடுகிறோம். ஆனால் அல்லாஹ் நபிகளார் ஸல் அவர்களுக்கு யுத்த களத்திலும் எவ்வாறு பகுதி பகுதியாக போர் வீரர்களுக்கு தொழுகை நடத்த வேண்டும் என்பதை அல்குர்ஆனில் சூரத்துல் நிஸா 102 வசனத்தில் குறிப்பிடுகிறான். மேலும் கண் தெரியாத ஒரு நபித்தோழர் […]

Read more

அல்குர்ஆனின் வெளிச்சத்தில் வாழ்வோம்

அல்குர்ஆனின் வெளிச்சத்தில் வாழ்வோம்

அல்லாஹ் மனிதர்களையும் ஜின்களையும் அதே போன்று கோடான கோடி வஸ்துகளையும் படைத்துள்ளான். ஆனால் அல்குர்ஆன் என்பது படைப்பு அல்ல. மாறாக இது அல்லாஹ்வின் (கலாம்) பேச்சாகும். இது அவனுடைய ஸிஃபத்தாகும். இது அல்லாஹ்வுடன் தொடர்புடையது.  அல்குர்ஆன் பற்றி அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான் ”ஈமான் கொண்டார்களே அவர்களுக்கு, அவர்களுடைய இருதயங்கள் அல்லாஹ்வையும், இறங்கியுள்ள உண்மையான (வேதத்)தையும் நினைத்தால், அஞ்சி நடுங்கும் நேரம் வரவில்லையா? மேலும், அவர்கள் – முன்னால் வேதம் கொடுக்கப்பட்டவர்களைப் போல் ஆகிவிட வேண்டாம், (ஏனெனில்) அவர்கள் மீது நீண்ட காலம் சென்ற […]

Read more

மரணத்திற்கு பின் மனிதனின் நிலை

இந்த உலகில் மரணத்தை ஏற்றுக் கொள்ளாத எந்த மனிதரும் இல்லை. ஆனால் முஸ்லிம்கள் இந்த நம்பிக்கைக்கு மேல் மரணத்திற்கு பின் ஒரு வாழ்க்கை உண்டு- அதற்காக கேள்வி கணக்கு உண்டு என்றும் அதற்கேற்ப சுவர்க்கமோ நரகமோ உண்டு என்பதையும் ஏற்றுக் கொண்டவர்கள். ஆனால் உறுதியாக நம்பும் அந்த மறுமை வாழ்க்கை வெற்றிக்காக வாழ்கிறோமா என்பதை சிந்திக்க வேண்டும். பொதுவாக மனிதன் என்ற அமைப்பில் இடைஇடையே மறந்து வாழ்கிறோம். ஒரு மனிதன் மரணித்த பின் அவனுக்கு கப்ர் வாழ்க்கை ஆரம்பமாகி விடும். இதை நாம் அறிய […]

Read more

அபிவிருத்தி அல்லாஹ்வின் அருட்கொடை

அபிவிருத்தி அல்லாஹ்வின் அருட்கொடை

இந்த உலகில் அல்லாஹ்வின் அபிவிருத்தி என்பது மிகவும் இன்றியமையானதாகும். அதிகம்,அபிவிருத்தி  ஒன்று போல் தோன்றினாலும் – வேறானவையாகும். அதிகம் சம்பாதிப்பதோ அதிகமாக வாழ்வதோ பரகத் – அபிவிருத்தி ஆகாது. மாறாக குறைவாக சம்பாரித்தாலும் மனநிறைவுடன் சந்தோசமாக வாழ்வதாகும். குறைவான நாட்கள் வாழ்ந்தாலும் நோய் நொடியிலிருந்து சந்தோசமாக வாழ்வதாகும். அல்லாஹ் நபியவர்களுக்கு ”பரகத் பொருந்திய இடத்தில் என்னை இறக்கி வைப்பாயாக” என்று வேண்ட கூறுகிறான். மேலும் அல்லாஹ் தனது திருமறையில் ”ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக […]

Read more

ரமலானுக்கு தயாராவோம்!

ரமலானுக்கு தயாராவோம்!

நபிகளார் ஸல் அவர்கள் ரமளானுக்கு தயாராக ஷஃபான் மாத்திலேயே தொடங்கி விடுவார்கள். அதிகமான நாட்கள் இந்த மாதத்தில் நோன்பு நோற்பவர்களாக இருப்பார்கள். அல்லாஹ் மாதங்களில் சில வித்தியாசங்களை ஏற்படுத்தி ஒன்றை விட மற்றொன்று சிறப்பு மிக்கதாக ஆக்கியுள்ளான். அதே போல் பகல்களில் நகர் நாட்கள் (குர்பானி கொடுக்கப்படும் நாட்கள் ) சிறப்பு பெற்றது போல, இரவுகளில் லைலத்துல் கத்ர் 1000 மாதங்களை விட சிறந்து விளங்குவது போன்று ரமளான் மாதத்தை மிகவும் உண்ணதமானதாக ஆக்கியுள்ளான். காரணம் இந்த மாத்தில் தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டக் கூடிய […]

Read more

பிறருக்கு நன்மை செய்வோம்

பிறருக்கு நன்மை செய்வோம்

இயற்கையாக மனிதன் எந்த ஒரு நன்மையையும் தான் மட்டும் அனுபவிக்க வேண்டும் என்றே நினைப்பான். அதே போல் ஒரு தீமையோ அல்லது பாதிப்போ நடந்தால் அது தமக்கு நடக்கக் கூடாது என்றே நினைப்பான்.. ஆனால் நாம் அடையும் நன்மைகளை அடுத்தவர்களுக்காகவும் பகிர நினைப்பது என்பது மிக உயர்ந்த குணம். இது பாராட்டப்படகூடியதாகும். அன்று ஹிஜரத்தின் போது அன்சாரித் தோழர்கள் முஹாஜிர்களுக்கு செய்த நன்மையை அல்லாஹ் பாரட்டி அல்குர்ஆனில் ”… அவர்கள் மதீனாவில் முஹாஜிர்களுக்கு) முன்னரே ஈமானுடன் வீட்டை அமைத்துக் கொண்டவர்கள், அவர்கள் நாடு துறந்து […]

Read more

ஸஹாபியப்_பெண்களின்_தியாக_வரலாறு

ஸஹாபியப்_பெண்களின்_தியாக_வரலாறு

ஒவ்வொரு சமுதாயம் முன்னேற்றத்திற்கு சிலரது தியாகம் மிகவும் முக்கியமானதாகும். தியாகம் என்பது சமுதாயத்தில் ஒரு பங்காகும். இது தான் அந்த சமுதாயத்தின் வெற்றிக்க முக்கிய காரணியாகும். இந்த உலகத்தில் செய்யப்படும் தியாகம் என்பது இந்த உலக வாழ்வோடு முடிந்து விடும். ஆனால் அல்லாஹ்விற்காக இஸ்லாத்திற்காக செய்யப்படுபவைகள் பல ஆண்டுகளுக்கு சமுதாயத்திற்கு பயனுள்ளதாக அமையும். மேலும் அதற்காக அல்லாஹ்விடத்தில் பலமடங்காக மறுமையில் கூலி பெறுவார்கள். அவற்றில் பெண்களின் பங்கு மிக முக்கியமாகவம் மக்களுக்கு படிப்பினைகள் பெறுபவைகளாக இருந்துள்ளது. இஸ்லாத்திற்காக முதல் உயிர் தியாகியாகம் செய்தவர் ஒரு […]

Read more

அறிவியல் உலகில் அறியாமை இருள்

அறிவியல் உலகில் அறியாமை இருள்

நம்மில் பலர் ”மனிதனின் அறிவு” இன்று தான் வளர்ந்துள்ளது என்று ஆனால் அல்லாஹ் இதனை மறுக்கும் விதமாக ஆதம் அலை அவர்களுக்கு அன்றே எல்லா பொருட்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்ததாகக் கூறுகிறான். அல்லாஹ் விலங்குகளுக்கும் மற்ற பிராணிகளுக்கும் அறிவைக் கொடுத்துள்ளான். அந்த அறிவுக்கேற்ப அவைகள் தங்களது வாழ்க்கையை அமைத்துள்ளன. எறும்பு, தேனி போன்றன கட்டும் வீடுகள் நம்மால் சிந்திக்க முடியாத அளவிற்கு உள்ளன. இந்த உலகின் படைப்பினங்கள் அணைத்தும் அல்லாஹ்விற்கு முழுமையாக கட்டுப்பட்டுள்ளன. ஆனால் பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ள மனிதன்  தன்னை படைத்த இறைவனை மறந்தவனாக […]

Read more
1 2