உறவை பேணுவோம்

நாம் பல விசயங்களில் அல்லாஹ்விற்கு கட்டுபட்டு நல் அமல்கள் பல செய்கின்றோம். ஆனால் சில சில காரணங்களுக்காக நமது உறவுகளை வெட்டி வாழ்கின்றோம். நபிகளார் அவர்கள் ஒவ்வொரு குத்பாவின் ஆரம்பத்திலும் வழக்கமாக ஓதும் வசனங்களை நாம் கவணித்தால் (சூரா நிஸாவின் ஆரம்பம்) இரத்த உறவுகளை பேணுதலின் அவசியத்தை அறியலாம். மேலும் நபிகளார் ”உறவுகளை துண்டிப்பவர்களை அல்லாஹ்வும் தொடர்பை துண்டிப்பதாக” கூறுகிறார்கள். உறவை கொண்டாடுபவர்களுக்கு அல்லாஹ் ரிஸ்கை விஸ்தீரணமாக்குகிறான். மேலும் விவரங்கள் அறிய சேக் ஜமால் மதனி அவர்களின் இந்த வீடியோவைப் பார்க்கவும்…

Read more

தொழுகையின் முக்கியத்துவம்,

அல்லாஹ் தனது திருமறையில் “தொழுகையை பயபக்தியுடன் தொழும் முஃமின்கள் வெற்றி பெற்றதாகக்” கூறுகிறான். தொழுகையை விண்ணிலே நபிகளாரை அழைத்து கடமையாக்கினான். ஆரம்பத்தில் மக்காவிலேயே கடமையான இந்த தொழுகை என்பது முஃமின்கள் வாழ்வில் இறுதி மூச்சு வரை கண்டிப்பாக நிறைவேற்றப்பட வேண்டும். தண்ணீர் கிடைக்காமை, போர், முதுமை, நோய், பிரயாணம் என்ற எந்த சூழ்நிலையிலும் தொழுகையை விடமுடியாது. ஆனால் நாம் பாராமுகமாக நினைத்த நேரத்தில் தொழுகிறோம். வேண்டுமென்று ஒரு தொழுகையை விட்டாலும் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிடுவான் என்றும் ஜமாத்தை விடுபவர்கள் வெளிப்படையான முனாஃபிக்கள் மட்டுமே என்றும் […]

Read more

இவ்வுலகை நேசித்தலின் விபரீதங்கள்

இந்த உலகத்தை இஸ்லாம் துறந்து வாழச் சொல்லவில்லை. மாறாக ஒரு பயணமாக நினைத்து தேவையான அளவை எடுத்து வாழ வேண்டும். அளவு கடந்து இவ்வுலகை அனுமதிக்க விரும்புவர்.. கடல் நீரை குடிப்பவன் போலாவான்… “உணவு உண்பவர்கள் தங்களது தட்டின் பக்கம் அழைப்பது போல் ஒவ்வொரு திக்கிலிருந்தும் பிற சமுதாயங்கள், உங்களில் ஒருவர் இன்னொருவரைக் கொன்றிட அழைத்திடும் கட்டம் வரும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அன்றைய தினம் நாங்கள் சிறுபான்மையாக இருப்போம் என்பதாலா?” என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) […]

Read more