என்னை கவர்ந்த இஸ்லாம் 1

சகோதரி விஜயட்சுமி பிராமின் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். தன்னுடன் படிக்கும் மாணவிகள் குர்ஆனை ஆர்வத்துடன் ஓதுவதைக் கண்டு அது என்ன அதில் என்ன உள்ளது தானும் படிக்க விரும்பி கேட்டபோது மறுக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சி இவருக்கு ஒரு ஏமாற்றத்தை கொடுத்தது. எனவே அந்த குர்ஆனைப் படித்து அதில் உள்ள தவறுகளை மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டார். ஆனால் சுபுஹானல்லாஹ் எத்தனையோ மக்களை கவர்ந்து நேர்வழி காட்டிய அல்குர்ஆன் இவரையும் கவர்ந்து விட்டது. ஆம் அல்குர்ஆனால் கவரப்பட்டு இஸ்லாத்தில் இணைந்தார். இதை அறிந்த […]

Read more

தவ்ஹீதும் அதற்கு எதிரானவையும்

”இஸ்லாம் என்றால் என்ன” என்று ஜிப்ரயீல் அலை அவர்கள் மனித உருவத்தில் வந்து நபிகளார் ஸல் அவர்களிடம் கேள்வி கேட்க அதற்கு பதிலாக ”அல்லாஹ்விற்கு எதையம் இணை கற்பிக்காமல் அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும்.” என்பதைக் கூறி 5 கடைமைகளையும் கூறினார்கள். இணைவைக்காமல் இருப்பது தான் முஸ்லிமின் உயிர்மூச்சு. லுக்மான் அலை அவர்கள் தமது பிள்ளையிடம் கூறிய முதல் உபதேசம் ”என் அருமை மகனே! அல்லாஹ்விற்கு இணை வைக்காதே” என்பதாகும். இதில் அல்லாஹ்வை மட்டும் தான் வணங்க வேண்டும் என்பது அடங்கி விடும். பிள்ளைகளுக்கு […]

Read more

எதிரிகளிடமும் நபிகளாரின் உயர்ந்த குணங்கள்

நபிகளார் ஸல் அவர்கள் தனது தோழர்கள் மற்றும் முஸ்லிம்களிம் மட்டும் தான் அன்போடு நடந்தார்கள் என்று பலரும் நினைப்போம். ஆனால் அவர்கள் மனிதர்கள் மட்டுமல்ல மிருகங்கள் பறவைகள் ஆகியவைகளுடனும் அன்பான முறையில் நடந்து காட்டினார்கள். அல்லாஹ் தனது திருமறையில் ”உம்மை உலக மக்கள் அனைவர்களுக்கும் அருட்கொடையாக அனுப்பியுள்ளோம்” என்றான். அவர்கள் நபியாக 40 வயதில் தேர்ந்தெடுக்கப்படும் முன்பே மிக அழகிய குணங்களுடனே வாழ்ந்துள்ளார்கள். அவர்கள் இஸ்லாத்தை – ஏகத்துவத்தை மக்காவில் எடுத்துரைத்த போது அவர்களுக்கு அந்த மக்கள் கொடுத்த இன்னல்கள் ஏராளம். ஆனால் எந்த […]

Read more

கருவியல் ஓர் ஆய்வு (AlQuran and Embryology)

அல்லாஹ்  மனிதனை சிந்திக்கச் சொல்கிறான். எவன் சிந்தித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கையை வளர்க்கின்றானோ அவனைத் தான் விரும்புகிறான். காரணம் இவன் எல்லா நிலையிலும் அல்லாஹ்வை பயந்து வாழ்வான் – அவனது சட்ட திட்டங்களை முழுமையாக மதித்து நடப்பான். குருட்டுத்தனமாக அல்லாஹ்வை நம்புகிறவர்களை அல்லாஹ் விரும்புவதில்லை.   அல்லாஹ்விடம் ”நான் அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனாலும் எனது மனது திருப்தியடைய .. இறந்தவர்களை நீ எப்படி உயிர் கொடுக்கின்றாய் என்பதை எனக்க காட்டு” என்று  இபுறாஹிம் அலை அவர்கள் கேட்டதை அல்குர்ஆனில் பாராட்டிக் கூறுகிறான் .  அல்லாஹ் […]

Read more

அல்லாஹ்வின் ரஹ்மத்தைப் பெறுவோம்

அல்லாஹ்வுடைய ரஹ்மத் என்பது இம்மை மறுமை வெற்றிக்கு மிகவும் இன்றியமையாததாகும். முதல் மனிதரான ஆதம் அலை அவர்கள் அல்லாஹ்விடம் அல்லாஹ்வின் கருணையை அருளை மன்னிப்பை ரஹ்மத்தை வேண்டியுள்ளார்க்ள. அதே போல் நபிமார்களுக்கெல்லாம் தலைவரான முஹம்மது ஸல் அவர்கள் எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வின் ரஹ்மத்தை வேண்டியவர்களாக வாழ்ந்தார்கள். இரவுத் தொழுகையில் அல்லாஹ்விடம் அல்லாஹ்வின் ரஹ்மத்திற்காக மன்றாடியுள்ளார்கள். அதே போல் சுவர்க்கத்திற்கு நன்மாரயம் சொல்லப்பட்ட உமர் ரழி அவர்களின் வாழ்வில் இறுதி நேரத்தில் உள்ள ஒரு சம்பத்தைப் பார்ப்போம். அவர்கள் தொழ வைத்துக் கொண்டிருக்கும் போது அவர்கள் […]

Read more

உயிர் பிரியும் முன்!

இன்பத்தை துண்டிக்கக்கூடிய மரணத்தை அதிகப்படுத்துங்கள் என்று நபிகளார் ஸல் அவர்கள் கூறினார்கள். மரணத்தை நாத்திகர்களும் மற்ற மதத்தினர்களும் நம்புகிறார்கள். ஆனால் நமக்கும் அவர்களும் உள்ள பெரிய வித்தியாசம் நாம் மறுமையை நம்புகிறோம். நிரந்தரமான மறுமை வாழ்க்கைக்கு தயாரிப்புக்கான ஒரு தற்காலித இடம் தான் இந்த உலகம் என்றும் நம்புகிறோம். அல்லாஹ் தனது திருமறையில் ”ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் […]

Read more

என்னை கவர்ந்த இஸ்லாம்!

”இஸ்லாம் என்பதும் ஏதோ ஒரு சடங்குகள் அடங்கிய மதம். மற்ற மதங்களில் உள்ள கடவுள் போல் அரபியாவில் மரித்த ஒருவரைத் தான் அல்லாஹ் என்று கூறி அவரது சிலையை வணங்குகிறார்கள்.” இப்படித் தான் மாற்று மத சகோதர சகோதரிகள் பலர் நினைத்துள்ளனர். இதே கருத்தை உடைய பிராமண சகோதரி சுதா தன்னுடன் உள்ள கல்லூரி தோழிகளின் வித்தியாசமான செயல்களால் கவரப்பட்டார். சூடான பானத்தை அருந்தும் போதி ஊதி சாப்பிடக் கூடாது என்றும் சாப்பிடும் போது வீணாக்காமல் கையை சூப்பிச் சாப்பிடனும் போன்றன நபிகளாரின் நபிவழி […]

Read more

அமல்களின் மூலம் ஈமானை அதிகரிப்பது எப்படி?

நாம் வணக்கங்கள் செய்து வருகிறோம். இதன் மூலம்  ஈமான் அதிகரிக்க வேண்டும். ஆனால் மிக மிக குறைவாகவே நமது ஈமான் அதிகபட்டுள்ளது. காரணம் அந்த வணக்கங்கள் பற்றிய முழு விவரத்தை நாம் அறியவில்லை. ஏனோ தானோ என்று கடமைக்கு செய்கின்றோம். அவ்வாறு அல்லாமல் நாம் செய்யும் நல் அமல்களுக்கு உரிய ஹதீஸை அறிந்து படித்திருக்க வேண்டும். அதே போல் அதன் சிறப்புகளைக் கூறுகின்ற ஹதீஸையும் அறிந்திருக்க வேண்டும். உதாரணமாக எந்த நல்ல அமல் செய்தாலும் உடனே அது பற்றிளும் அதக் சிறப்புகள் பற்றிளும் நபி […]

Read more
1 2 3 4 5