ஹதீஸ் துறை தெய்வீகப் பாதுகாப்பை இழந்துள்ளதா?

இன்றைய முஸ்லிம் சமுதாயத்தில் மிக வேகமாக பரவி பரும் மிக முக்கியமான பிரச்சனைகள் – குழப்பங்கள் இரண்டு ஆகும். அதிலே ஒன்று ஷியாக்கள் என்ற வழிகெட்ட சிந்தனைப் பிரிவின் தாக்கம். இரண்டாவது பகுத்தறிவின் தாக்கம். இவற்றில் இரண்டாவது தாக்கம் மிக வேகமாக தமிழ் பேசும் மக்களிடையே பரவி வருகிறது. ரசூல் ஸல் அவர்கள் சொன்னதாக தெளிவாக நிரூபிக்கப்பட்ட பல ஹதீஸ்கள் இத்தகைய கூட்டத்தால், இன்று பகுத்தறிவுக்கு முரண்படுகிறது என்ற ஒரே காரணத்தால் நிராகரிக்கப்டுகிறது. ஸஹீஹ் புகாரியிலும் ஸஹீஹ் முஸ்லிமிலும் வரும் ஹதீஸ்களில் ஏறக்குறைய 78, இந்த பகுத்தறிவு சிந்ததைனவாதிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதற்கு அவர்கள் கூறும் காரணம் அல்குர்ஆனுக்கு நேரடியாக முரண்படுகின்றது என்பதாகும். ஆனால் சரியான ஆதாரத்தை காட்டவில்லை. ஹதீஸ் கலை வல்லுநர்கள் பலர் சரி கண்டுள்ளது இவர்களுக்கு முரண்படுகின்றது என்றால் இவர்களது தவறான சிந்தனை – பகுத்தறிவு எப்படி சரியாக இருக்க முடியும்? மேலும் விவரம் அறிய ஷேக் ஹசன் ஃபாரிஸ் மதனி அவர்களின் வீடியோவைப் பார்க்கவும்.

Leave a Reply