தண்டனைகள் தந்த பாடம்!

நபிகள் ஸல் அவர்கள் அல்லாஹ்விடம் மூன்று கோரிக்கைகளை பிராத்தணைகளாக வைத்தார்கள். அவை சமுதாயத்தை பசி பட்டினி, மூழ்கடிப்பு, மற்றும் பிரிவினை மூலம் அழித்து விடக்கூடாது என்பதாகும். அல்லாஹ் முதல் இரண்டை ஏற்றுக் கொண்டு மூன்றாவதை ஏற்றுக் கொள்ளவில்லை. சமுதாயத்தில் பிரிவினைகள் ஏற்பட்டு சனடைகள் மூலமும் அல்லாஹ் அழிவை ஏற்படுத்துவான். அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன் ஆகும். எனினும் அல்லாஹ் அர்ஷில் அவனது அருள் அவனது கோபத்தை முந்தி விட்டது என எழுதியுள்ளான். ஆக அல்லாஹ் மிகவும் அருளாளன் மற்றும் கிருபையாளன். ஒரு மனிதன் நன்மை செய்ய நாடி செய்ய முடியாமல் போய் விட்டால் அதற்காக அல்லாஹ் ஒரு நன்மையை தருகிறான். அந்த நன்மையை செய்து முடித்தால் அதற்காக எழுநூறு மடங்கு வரை நன்மைகள் தருகிறான். ஆனால் ஒரு தீமையை செய்தால் ஒரு தீமை மட்டுமே – செய்யாவிடடால் ஒரு நன்மை. அல்லாஹ் நமக்கு செய்த ஏராளமான அருட்களில் ஒன்று தான் (عقل) அகல் என்ற அறிவாகும். அதன் சரியான இலக்கணம் அல்லாஹ்வை புரிந்து அவனுக்கு கட்டுப்பட்டு அவனது சட்ட திட்டங்களை சரியாக செய்வதாகும். இன்று நாம் அறிஞர்கள், தத்துவஞானிகள் என்று கூறுபவர்கள் தனது சிந்தனையை வேறு வழிகளில் சிந்திக்கின்றனர். அல்லாஹ் இவர்களை மிருகங்களை விட மோசமாக சொல்கிறான். அல்லாஹ்வுக்கு கட்டுப்பட வைக்கும் இந்த அறிவை அல்லாஹ் தந்தது மிகவும் பெரிய அருட்கொடையாகும். அல்லாஹ் தன்னிடம் நன்றி கெட்டு மாறுபடுபவர்களுக்கு சில தண்டனைகளையும் கூறுகிறான். அல்குர்ஆனில் தண்டனைகள் கொடுக்கப்பட்ட பல சம்பவங்களை அல்லாஹ் கூறியுள்ளான். மேலும்
விவரம் அறிய ஷேக் ஜஹான் பலாஹி அவர்களின் இந்த வீடியோவைப் பார்க்கவும்

Leave a Reply