அழவைத்த அல்குர்ஆன் வசனங்கள்

இந்த உலகில் எதுவுமே தெரியாமல் பிறந்த போது நாம் பேசியது அழுகை தான். ஆனால் இன்று நமது அழுகை இந்த உலக ஆசாசபாசங்களுக்காக பயன்படுத்துகிறோம். இறப்பு, நோய், சொத்து சுகங்கள் இழப்பின் போது அழுகின்றோம். ஆனால் மறுமையை நினைத்து அழுவது இல்லை. திருமறையை ஓதும்போது அழுவது இல்லை. அல்குர்ஆன் மலைமீது இறக்கப்பட்டால் சுக்கு நூறாகிவிடும் என்று அல்லாஹ் திருமறையில் கூறுகிறான். அல்லாஹ் தனது திருமறையில் ”ஈமான் கொண்டார்களே அவர்களுக்கு, அவர்களுடைய இருதயங்கள் அல்லாஹ்வையும், இறங்கியுள்ள உண்மையான (வேதத்)தையும் நினைத்தால், அஞ்சி நடுங்கும் நேரம் வரவில்லையா? (57 – 16)” என்று கூறுகிறான். ஈமான் கொண்டவர்கள் இம்மை வாழ்க்கையை கொடுத்து மறுமை வாழ்கையைப் பெறுவார்கள். எனவே தான் நபிகளாரிடம் கல்வி கற்ற ஸஹாபாக்கள் இந்த குர்ஆனை மறுமைக்கான வழிகாட்டியாக எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் குர்ஆனை ஓதும் போது கண்கள் கண்ணீரைச் சிந்தும். நெஞ்சுகள் சிலுசிலுத்து துடித்து அழுகை பெருகும்..இது பற்றி மேலும் ஷேக் அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி அவர்களின் இந்த வீடியோவைப் பாருங்கள்…

Leave a Reply