மனைவிக்கும் தாயிற்கும் இடையில் ஒரு ஆண்மகன்!

ஒரு ஆண்மகனின் உழைப்பின் இலட்சியம் குடும்ப சந்தோஷமாகும். நாம் உழைப்பதின் மூலம் குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் குடும்பம் எந்த சூழ்நிலையிலும் சந்தோசமாக தன்னிறைவாக வாழவேண்டும் என்பது தான் நமது நோக்கமாகும். அப்படி குடும்ப வாழ்க்கையில் சந்தோசம் – மகிழ்ச்சி அமையாவிட்டால் வாழ்க்கையில் விரக்தி ஏற்படும். எனினும் நமது பொருளாதாரம், உழைப்பிற்குப் பின்பும் இப்படி ஒரு சந்தோசமற்ற குடும்ப நிலை வரும்போது அதிகமாக பாதிக்கப்படுபவர் ஆண்மகன் ஆகும். அவர் பெற்றோருக்கு சரியான மகனாக, மனைவிக்கு பிடித்த கணவனாக திகழ வேண்டும். நம்மில் 25 முதல் 30 சதம் இந்த பிரச்சனைக்கு அப்பாற்பட்டுள்ளார்கள். காரணம் நல்ல குணத்தினாலோ, மார்க்கப்பற்றினாலோ அல்ல. மாறாக யார் உணர்வுகளை அதிகம் மதிக்கிறார்களோ அவர்களுக்குத் தான் இந்த பிரச்சனைகள் அதிகம். சில வீடுகளில் ஆண்மகன் நுழைந்ததும் அணைவர்களும் அடங்கி விடுவார்கள். அங்கே சுதந்திரம் இருக்காது. ஆனால் பெற்றோருக்கும் மனைவிக்கும் இடையில் ஒற்றுமையிருக்கும். அதற்காக இந்த குடும்பம் எல்லா விதத்திலும் சந்தோசமாக உள்ளது என்ற கூற முடியாது.  நம்மில் பலர் அடுத்த குடும்பத்தை தம்முடைய குடும்பத்துடன் ஒப்பிடுவதால் பெரும்பகுதி பிரச்சனை வருகின்றது. உண்மையில் மனவைிக்கும் தாயிற்கும் இடையில் பிரச்சனை பெரிதாவதற்கு முக்கிய காரணம் ஒரு ஆண்மகனின் மேலாண்மை குறைவு தான். மேலும் இது பற்றிய முழு விவரத்தையும் அறிய ஷேக் முஜாஹித் ரசீன் அவர்களின் இந்த வீடியோவைப் பார்க்கவும்.

Leave a Reply