உயிர் பிரியும் முன்!

இன்பத்தை துண்டிக்கக்கூடிய மரணத்தை அதிகப்படுத்துங்கள் என்று நபிகளார் ஸல் அவர்கள் கூறினார்கள். மரணத்தை நாத்திகர்களும் மற்ற மதத்தினர்களும் நம்புகிறார்கள். ஆனால் நமக்கும் அவர்களும் உள்ள பெரிய வித்தியாசம் நாம் மறுமையை நம்புகிறோம். நிரந்தரமான மறுமை வாழ்க்கைக்கு தயாரிப்புக்கான ஒரு தற்காலித இடம் தான் இந்த உலகம் என்றும் நம்புகிறோம். அல்லாஹ் தனது திருமறையில் ”ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (3:185) ” என்று கூறுகிறான். இப்பொழுது மரணம் சர்வசாதரணமாக எதிர்பாராத நிலையில் அடிக்கடி நிகழ்வதைப் பார்க்கும் போது நாமும் நமது மரணத்தை எதிர்பார்க்க வேண்டும். மறுமை வெற்றிக்காக தயார் செய்ய வேண்டும். மேலும் விவரம் அறிய ஷேக் K.L.M. இப்ராஹீம் மதனீ அவர்களின் உரையைக் கேட்கவும்…

Leave a Reply