மிஃராஜ் தரும் படிப்பினைகள்

நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் நடத்திக்காட்டிய பல அற்புதங்களில் ஒன்றுதான் ‘அல் இஸ்ராஃ மற்றும் மிஃராஜ்’ எனும் அற்புதப் பிரயாணம். 1400 ஆண்டுகளுக்கு முன் எவ்வித கண்டுபிடிப்புகளுக்கே வாய்ப்பில்லாத காலத்தில், இன்று வரையென்ன, உலகம் அழியும்வரை, யாராலும் எப்படிப்பட்ட கண்டுபிடிப்புக்களாலும் செல்லவோ, சிந்திக்கவோ முடியாத தொலை தூரத்தை ஒரு நொடிப்பொழுதில் நடத்திக்காட்டிய அற்புதப் பயணம் தான் ‘அல் இஸ்ராஃ மற்றும் மிஃராஜ்’. நபிகளார் ஸல் அவர்களுக்கு மிஃராஜ் பயணம் மூலம் பல அதிசியங்களைக் காட்டினான். சுவர்க்கம் நரகம் போன்றவற்றையும் கண்டு வந்தார்கள்.  ஐந்து நேரத் தொழுகையை நமக்கு கடமையாக பெற்று வந்தார்கள். மிஃராஜ் எந்த தினம்  ஏன் எந்த மாதம் என்பதிலேயே பல கருத்து வேறுபாடுகள் உள்ளன. அப்படியிருக்க நமது சமுயாத்தில் 27ந் தேதியை உறுதியாக எடுத்துக் கொண்டு அந்த தினத்தில் விஷேச தொழுகை, நோன்பு விருந்து என்று பல பித்அத்களை உருவாக்கி உள்ளனர். இந்த பித்அத்கள் எல்லாம் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்டவைகள். நபிகளார் ஸல் அவர்களோ ஸஹாகாக்களோ இதனை செய்யவில்லை. மிஃராஜ் மற்றும் படிப்பினைகள் பற்றி மேலும் விவரம் அறிய ஷேக் லாஃபர் பஹ்ஜி – மதனி அவர்களின் வீடியோவைப் பார்க்கவும்..

Leave a Reply