அல்லாஹ்வின் ரஹ்மத்தைப் பெறுவோம்

அல்லாஹ்வுடைய ரஹ்மத் என்பது இம்மை மறுமை வெற்றிக்கு மிகவும் இன்றியமையாததாகும். முதல் மனிதரான ஆதம் அலை அவர்கள் அல்லாஹ்விடம் அல்லாஹ்வின் கருணையை அருளை மன்னிப்பை ரஹ்மத்தை வேண்டியுள்ளார்க்ள. அதே போல் நபிமார்களுக்கெல்லாம் தலைவரான முஹம்மது ஸல் அவர்கள் எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வின் ரஹ்மத்தை வேண்டியவர்களாக வாழ்ந்தார்கள். இரவுத் தொழுகையில் அல்லாஹ்விடம் அல்லாஹ்வின் ரஹ்மத்திற்காக மன்றாடியுள்ளார்கள். அதே போல் சுவர்க்கத்திற்கு நன்மாரயம் சொல்லப்பட்ட உமர் ரழி அவர்களின் வாழ்வில் இறுதி நேரத்தில் உள்ள ஒரு சம்பத்தைப் பார்ப்போம். அவர்கள் தொழ வைத்துக் கொண்டிருக்கும் போது அவர்கள் எதிரிகளால் குத்தப்பட்டார்கள். அவர்கள் தனது தலையை தனது மகன் மடியிலிருந்து தரையில் வைக்கச் சொல்லி ” எனக்கும் எனது தாயிற்கும் கேடு தான் .. அல்லாஹ் எங்களுக்கு அருள் புரியாவிட்டால் ” என்று இறுதி நேரத்தில் கூறினார்கள். நாம் இறந்தவர்களுக்காக ஜனாஸா தொழுகை நிறைவேற்றும் போது நாம் செய்யும் பிராத்தணையில் ”மரித்தவருக்காக அல்லாஹ்வின் மண்ணிப்பையும் கருணையையும் வேண்டுகிறோம். இப்படி எந்த சூழ்நிலையிலும் அல்லாஹ்வின் ரஹ்மத் இல்லையென்றால் நாம் வெற்றி பெற முடியாது எனவே தான் முஹம்மது ஸல் அவர்கள் அல்லாஹ்வின் ரஹ்மத்தை வேண்டுவதை ஊக்கப்படுத்தினார்கள். மேலும் அல்லாஹ்வின் ரஹ்மத் பற்றிய விவரங்களை அறிய ஷேக் முபாரக் மதனி அவர்களது வீடியோவைப் பார்க்கவும்…

Leave a Reply