தவ்ஹீதும் அதற்கு எதிரானவையும்

”இஸ்லாம் என்றால் என்ன” என்று ஜிப்ரயீல் அலை அவர்கள் மனித உருவத்தில் வந்து நபிகளார் ஸல் அவர்களிடம் கேள்வி கேட்க அதற்கு பதிலாக ”அல்லாஹ்விற்கு எதையம் இணை கற்பிக்காமல் அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும்.” என்பதைக் கூறி 5 கடைமைகளையும் கூறினார்கள். இணைவைக்காமல் இருப்பது தான் முஸ்லிமின் உயிர்மூச்சு. லுக்மான் அலை அவர்கள் தமது பிள்ளையிடம் கூறிய முதல் உபதேசம் ”என் அருமை மகனே! அல்லாஹ்விற்கு இணை வைக்காதே” என்பதாகும். இதில் அல்லாஹ்வை மட்டும் தான் வணங்க வேண்டும் என்பது அடங்கி விடும். பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேணடிய அடிப்படை இது தான். அதேபோல் யஃகூப் அலை அவர்கள் தமது மரண நேரத்தில் பிள்ளைகளிடம் ”நீங்கள் எனக்குப் பிறகு யாரை வணங்குவீர்கள்” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் ”உங்களது மற்றும் இபுறாஹிம், இஸ்மாயில் மற்றும் இஸ்ஹாக் அலை அவர்களின் இறைவனாகிய ஒரே இறைவனையே வணங்குவோம்” என்றனர். அல்லாஹ் இந்த சம்பவங்களை அல்குர்ஆனில் நமக்குப் பாடமாக ஆக்கியுள்ளான். ஒரே இறைவன் என்ற தௌஹீத் மிக மிக முக்கயமான அடிப்படையாகும். இரு உலகிலும் வெற்றி பெற தௌஹீது தான் மிக அவசியம். மறுமையில் விசாரனையின் போது அதிகமான பாவங்கள் செய்த ஒரு மனிதனின் செயல்கள் நிறுக்கப்படும். அப்போது அவனது தௌஹீது இந்த பாவங்களை மிஞ்சிவிடும். மேலும் இது பற்றி அறிய ஷேக் அப்பாஸ் அலி அவர்களின் இந்த வீடியோவைப் பார்க்கவும்.