ஈமானில் உறுதி!

நாம் ஒவ்வொருவரும் நமது ஈமானை வளர்த்துக் கொள்ள வேண்டும். அது தான் உறுதிக்கு அடையாளம். அல்லாஹ் தன் திருமறையில் ”எந்த காரியத்திலும் அல்லாஹ்வின் பெயர் சொல்லப்பட்டால் முஃமினுடைய உள்ளங்கள் நடுநடுங்கி விடும். அதே போல் அல்லாஹ்வின் வசனங்கள் கூறப்பட்டால் அவனது ஈமான் மேலும் கூடி விடும். நபிகளார் அவர்கள் ஈமான் – இறையச்சம் என்பது கல்பில் உள்ளது என்றும் அந்த கல்பு சரியாக இருந்தால் எல்லாம் சரியாகி விடும். அதே போல் அந்த இதயம் கெட்டு விட்டால் அணைத்துமே கெட்டு விடும் என்றும் கூறினார்கள். இதற்கு நமது உள்ளத்தில் உறுதி ஏற்பட வேண்டும். ஈமான் என்பது உள்ளத்தால் நம்பி நாவால் கூறி உடலால் செயல்பட வேண்டும். இது தான் ஈமானின் அடிப்படை. ஷேக் அவர்கள் நம்முடைய ஈமான் உறுதிப்பட அதிகரிக்க கூறும் விசயங்களை அறிய இந்த வீடியோவைப் பார்க்கவும்

Leave a Reply