நபி மொழிகளும் இன்றைய முஸ்லிம்களும்

இறுதி நபியாக முஹம்மது ஸல் அவர்கள் இறுதி நாள் வரை நபியாக அனுப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு அற்புதமாக அல்குர்ஆன் கொடுக்கப்பட்டது. மேலும் அவர்களது வாழ்க்கையே நமக்கு வழிகாட்டியாக கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களது வாழ்க்கை வஹியாகும். சுன்னத்துகள் – ஹதீஸ்கள் இரண்டும் ஒன்றே. எவ்வாறு அவற்றை அணுக வேண்டும் என்பதை நாம் சரியாக அறிய வேண்டும். நபிகளார் பற்றிய செய்தி நமக்கு ஆதாரப்பூர்வமாக கிடைக்கப் பெற்றால் அவற்றை நாம் உண்மைப்படுத்த வேண்டும் – அதை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும். நபிகளார் எடுத்து தந்ததை வாழ்க்கையில் எடுக்க வேண்டும், தடுத்ததை விட வேண்டும். இவற்றுக்கு மாற்றாக செய்வது தடை செய்யப்பட்டதாகும். இது அல்லாஹ்வின் கட்டளை. அல்லாஹ் தன் திருமறையில் ”உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்.(4 – 65)” மேலும் இது பற்றி முழுமையாக அறிய ஷேக் டாக்டர் அம்ஜத் ராஸிக் மதனீ அவர்களின் இந்த வீடியோவைப் பார்க்கவும்..

Leave a Reply