மதி மயக்கும் உலக வாழ்வும் உயிர் பிரியும் நேரமும்

நபிகளார் அவர்கள் கூறினார்கள் ”இவ்வுலகம் என்பது ஒரு முஃமினுக்கு சிறைச்சாலையாகும். நிராகரிப்பர்வகளுக்கு இந்த உலகம் சுவர்க்கம்”. அதற்காக முஃமின்கள் இந்த உலகை வெறுத்து ஒதுக்கி விட முடியாது. காரணம் நபிகளார் வழிகாட்டல் என்பது துறவரம் அல்ல. ஒரு முறை மூன்று ஸஹாபிக்கள் நபிகளாரின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை அறிந்து ஒருவர் இரவெல்லாம் வணங்குவேன் என்றும் இன்னொருவர் பகலெல்லாம் நோன்பு பிடிப்பேன் என்றும் மூன்றாமவர் திருமணம் செய்ய மாட்டேன் என்று பேசிக் கொண்டார்கள். இதையறிந்த நபிகளார் அவா்கள் ”  நோன்பும் பிடிக்கின்றேன் – விடவும் செய்கின்றேன் – இரவும் வணங்குகிறேன் – விடவும் செய்கின்றேன். அதே போன்று திருமண வாழ்விலும் ஈடுபடுகிறேன். இது தான் எனது வழிகாட்டல். ” என்றார்கள். ஆக அல்லாஹ் நமக்கு கொடுத்த வாழ்க்கையை முறையாக வாழ வேண்டும். உழைப்பை வரவேற்கின்றது. பொருளாதாரத்தை தேடலாம் – சேமிக்கலாம் ஆனால் இந்த பொருளாதாரம் நம்மை காப்பாற்றும் என்ற எண்ணம் தான் கூடாது. மேலும் அதிக விவரம் அறிய ஷேக் ரஸ்மி ஷஹீத் அமீனி அவர்கள் இந்த வீடியோவைப் பார்க்கவும்…

Leave a Reply