தொழுகையின் முக்கியத்துவம்,

அல்லாஹ் தனது திருமறையில் “தொழுகையை பயபக்தியுடன் தொழும் முஃமின்கள் வெற்றி பெற்றதாகக்” கூறுகிறான். தொழுகையை விண்ணிலே நபிகளாரை அழைத்து கடமையாக்கினான். ஆரம்பத்தில் மக்காவிலேயே கடமையான இந்த தொழுகை என்பது முஃமின்கள் வாழ்வில் இறுதி மூச்சு வரை கண்டிப்பாக நிறைவேற்றப்பட வேண்டும். தண்ணீர் கிடைக்காமை, போர், முதுமை, நோய், பிரயாணம் என்ற எந்த சூழ்நிலையிலும் தொழுகையை விடமுடியாது. ஆனால் நாம் பாராமுகமாக நினைத்த நேரத்தில் தொழுகிறோம். வேண்டுமென்று ஒரு தொழுகையை விட்டாலும் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிடுவான் என்றும் ஜமாத்தை விடுபவர்கள் வெளிப்படையான முனாஃபிக்கள் மட்டுமே என்றும் ஹதீஸ்களில் வந்துள்ளது. நான்கு இமாம்களும் “தொழுகையை விட்டவர்களை முஸ்லிமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது. முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்யக் கூடாது, கொலை செய்ய வேண்டும், முஸ்லிம் மையவாடியில் அடக்கக் கூடாது” என்றும் கூறியுள்ளார்கள். தொழுகையின் முக்கியம் பற்றி மேலும் அறிய ஷேக் ஜமால் மதனியின் இந்த வீடியோவைப் பார்க்கவும்…

Leave a Reply