அன்பான மனைவி !

திருமண வாழ்வு என்பது பிரச்சனையையும் உள்அடக்கியது தான். சரித்திரத்தில் பார்த்தாலும் இன்றைய சூழ்நிலையில் எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சியும் பிரச்சனையும் கலந்தது தான் திருமண வாழ்க்கை. அன்பான மனைவி என்பவள் அழகிய முறையில் நடந்து கொண்டால் அன்பாக பண்பாக நடந்து கொண்டால் அன்றாடம் ஏற்படும் பிரச்சனைகள் எல்லாம் சீராகி விடும். ஒரு பெண்ணுக்கு திருமண வாழ்வு என்பது ஒரு அமானிதம். அல்லாஹ் அளித்த அருட்கொடை. நம் சமுதாயத்தில் இன்னும் பலர் வயதுகள் பல கடந்தும் கண்ணிகளாக இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் நமக்கு மனவைி என்ற அந்தஸ்து கிடைத்திருப்பது அல்லாஹ் கொடுத்த அமானிதம். பிள்ளைகளுக்கு ஒரு சிறந்த தாயாக – தாதியாக கணவனுக்கு அன்பான உபசரினையான மனைவியாக வாழ்வதன் மூலம் இவ்வலகில் சிறந்த மகிழ்ச்சியான வாழ்க்கையையும் மறுமையில் வெற்றியையும் பெறலாம். பெண்ணாக பிறந்திருப்பதும் ஒரு பாக்கியம் காரணம் குர்ஆன் சுன்னாவை நடைமுறைபடுத்தினால் எளிதாக சுவர்க்கம் செல்லலாம். ஆனாலும் நபிகளார் அவர்கள் நரகத்தில் அதிகமான பெண்களைக் கண்டதாக கூறி உள்ளதை சிந்திக்க வேண்டும். நபிகளார் ஸல் அவர்கள் பெண்களில் சிறந்தவர் யார் என்பதற்கு ”நீ பார்த்தால் உன்னை சந்தோசமடையச் செய்வாள். மேலும் இந்த தலைப்பில் விவரம் அறிய ஷேக் ரஸ்மி ஷாஹித் அமீனி அவர்களின் இந்த வீடியோவைப் பார்க்கவும்..

Leave a Reply