அல்குர்ஆனின் வெளிச்சத்தில் வாழ்வோம்

அல்லாஹ் மனிதர்களையும் ஜின்களையும் அதே போன்று கோடான கோடி வஸ்துகளையும் படைத்துள்ளான். ஆனால் அல்குர்ஆன் என்பது படைப்பு அல்ல. மாறாக இது அல்லாஹ்வின் (கலாம்) பேச்சாகும். இது அவனுடைய ஸிஃபத்தாகும். இது அல்லாஹ்வுடன் தொடர்புடையது.  அல்குர்ஆன் பற்றி அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான் ”ஈமான் கொண்டார்களே அவர்களுக்கு, அவர்களுடைய இருதயங்கள் அல்லாஹ்வையும், இறங்கியுள்ள உண்மையான (வேதத்)தையும் நினைத்தால், அஞ்சி நடுங்கும் நேரம் வரவில்லையா? மேலும், அவர்கள் – முன்னால் வேதம் கொடுக்கப்பட்டவர்களைப் போல் ஆகிவிட வேண்டாம், (ஏனெனில்) அவர்கள் மீது நீண்ட காலம் சென்ற பின் அவர்களுடைய இருதயங்கள் கடினமாகி விட்டன அன்றியும், அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக – பாவிகளாக ஆகிவிட்டனர். (அல்குர்ஆன் 57:16) ” என்று கூறுகிறான். எந்த சமுதாயம் அல்குர்ஆனை நம்பி அதனை முழுமையாக கடைபிடிக்கின்றார்களோ அந்த சமுதாயம் மற்ற சமுதாயத்திற்கு மேலானதாக வழிகாட்டக் கூடியதாக அல்லாஹ் ஆக்குவான். அதேபோல் இந்த சமுதாயத்தை உலகமே அஞ்சும். நபிகளார் அவர்கள் இந்த குர்ஆனை மூலமே இந்த உலகத்தை தன் பக்கம் கொண்டு வந்துள்ளார்கள். ஒரு முறை நபிகளார்கள் அவர்கள் சூரத்துன் நஜ்மை ஓதி சஜ்தா செய்த போது அவர்களுடன் முஸ்லிம்களும் முஷ்ரிகளும் ஜின்களும் சஜதா செய்தனர். மேலும் விவரம் அறிய ஷேக் அப்துல் பாசித் புஹாரி அவர்களின் இந்த வீடியோவைப் பார்க்கவும்.

Leave a Reply