துஆக்கள் ஏன் அங்கீகரிக்கப்படுவதில்லை?

பொதுவாக துவா என்பது ஒரு முஃமினோடு தொடர்புடையது. துவா என்பது வணக்கமாகும். எந்த ஒரு வணக்கம் செய்தாலும் அதில் துவா தான் முக்கியமானதாக அமைந்திருக்கும்.  நமது துவாக்கள் ஏற்றுக் கொள்ளப்படாமைக்கு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக நாம் கேட்கும் துவாவில் ஒரு ஈடுபாடு – கவணம் இல்லாமையாகும். அடுத்து அல்லாஹ்விடம் ஏன் கேட்கனும்.. அவனுக்குத் தானே எல்லாமே தெரியுமே என்ற ஒரு சிந்தனையுடன் கடமைக்காக துவா கேட்பது. ஆனால் நாம் அல்லாஹ்விடம் மனம் திறந்து நமது அடிமைத்தனத்தைக் காட்ட வேண்டும். அதைத் தான் அல்லாஹ் விரும்புகிறான் – மாறாக நமது நிலமையை அவன் அறியாமல் உள்ளான் என்பதல்ல. அதே போல் ஒரு முறை கேட்டு விட்டு மறுமுறை கேட்பது இல்லை. இதுவும் தவறு. காரணம் உண்மையில் நமக்கு உள்ள தேவையை அல்லாஹ் மட்டுமே தர முடியும் – தருவான் என்ற உறுதியான நம்பிக்கை வர வேண்டும். மனிதர்களாகிய நாம் என்றும் அடிமைய அல்லாஹ் மட்டுமே பெருமைகள் அனைத்துக்கும் சொந்தக்காரன் ஆகும். மேலும் இது பற்றி விவரம் அறிய ஷேக் முஜாஹித் அவர்களின் இந்த வீடியோவைப் பார்க்கவும்..

 

Leave a Reply