ஷைத்தானின் அலங்காரம்!

அல்லாஹ் ஷைத்தானை நமக்கு அறிமுகப்படுத்தும் போது ஷைத்தான் நமது எதிரி என்று கூறியுள்ளான். அவன் தனது வீழ்ச்சிக்கு ஆதம் அலை அவர்கள் தான் காரணம் என்பதால் அவர்களை தனது சூழ்ச்சியால் பாவத்தை செய்யச் செய்தான். ஷைத்தானும் பாவம் செய்தான் ஆதம் அலை அவர்களும் பாவம் செய்தார்கள். ஆனால் ஷைத்தான் அல்லாஹ்விடம் எதிர்த்து பேசினான். ஆதம் அலை அவர்கள் தனது பாவத்தை காரணம் காரியம் சொல்லாமல் ஏற்றுக் கொண்டு பாவமன்னிப்பு கேட்டார்கள். அல்லாஹ் நமக்கு செய்த அருட்கொடைகளில் ஒன்று தான் ஷைத்தானின் வழிகேடுகள் பற்றிய விவரங்கள். ஷைத்தான் மனிதனை வழிகெடுக்க எத்தணையோ சூழ்ச்சிகளை கையாள்கிறான். அவற்றில் ஒன்று பாவங்களை அழகான வணக்கமாக காட்டுவதாகும். மற்றான்று பெரிய பாவங்களை மிக சாதாரணமாகக் காட்டி செய்ய தூண்டுவான். இந்த பாவத்தை செய்யும் போது மனதில் சிறிய குறுகுறுப்பு இருக்கும். மனிதன் சுதாரித்தால் தப்புவதற்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் பாவமான காரியங்களை நன்மையான காரியமாக செய்வதிலிருந்து தப்புவது மிகவும் கடினம். இதனை செய்யும் மனிதன் நன்மை என்றே செய்வான். பாவம் என்றே எண்ண மாட்டான். இவைகள் தான் அல்லாஹ் ரசூல் அவர்கள் மார்க்கத்தில் காட்டாத புதிய விசயங்களாகும். (பித்ஆக்கள்). இவைகளுக்காக மனிதன் இறுதி வரை மன்னிப்பே கேட்க மாட்டான் – திருந்த மாட்டான். இது ஷைத்தானின் பெரிய ஏமாற்று காரியமாகும். மேலும் ஷைத்தானின் சூழ்ச்சிகள் பற்றி அறிய ஷேக் ஜக்கரியா அவர்களின் வீடியோவைப் பார்க்கவும்…

Leave a Reply