மனிதனின் உள நோய்கள்!

நோன்பு நோற்பதன் அடிப்படை என்பது சாப்பிடாமல் குடிக்காமல் இருப்பது மட்டுமே அல்ல. மாறாக உள்ளம் தூய்மை அடைய வேண்டும். யார் மோசமான அதாவது பொய் சாட்சியம் போன்ற மோசமான செயல்களிலும் இருந்து விட்டு விட வில்லையோ அவர் உணவை – குடிப்பை விட்டு விடுவதால் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை என்பதாக நபிகளார் ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள். நோன்பு என்பது நமக்கு இறையச்சத்தை ஏற்படுத்த வேண்டு்ம். ஆக ரமளான் நமக்கு வணக்கத்தை மட்டுமல்லாது சிறந்த குணங்களையும் பயிற்சியளிப்பதாக இருக்க வேண்டும். இன்று நம்மில் பலர் சின்ன சின்ன காரியங்களுக்காக விட்டு கொடுக்க முடியாமல் பிடிவாதமாக உள்ளோம். ஒரு மகன் தந்தையிடமோ தாயிடமோ ஒரு செயலுக்காக விட்டு கொடுப்பதால் தோல்வியடைவது இல்லை. தவறே இல்லாவிட்டாலும் தாய் தந்தைக்காக விட்டு விடுவதால் (மார்க்கம் அல்லாத செயல்களில்) நம்முடைய கௌரவம் கூடுமே தவிர குறையாது. ஒரு முஃமின் என்பவன் ஏமாறுபவனாக – சங்கைக்குரியவனாக இருப்பான் என்று நபிகளார் அவர்கள் கூறியுள்ளார்கள். அதாவது முஃமின் அடுத்தவனை ஏமாற்றுபவனாக – இப்படி ஏமாறி விடுவோம் போன்ற கீழ்தரமான எண்ணங்களில் இருக்க மாட்டான். விட்டு கொடுத்து வாழ்ந்த முறையை அண்ணல் நபிகளார் ஸல் அவர்கள் வாழ்விலே – ஸஹாபாக்கள் வாழ்வினிலே பார்க்கலாம். ஒரு முறை நபிகளார் வீட்டிற்கு உணவு தட்டு வந்த பொழுது அன்னை ஆயிஷா ரழி அவர்கள் அந்த தட்டை உடைத்து விட்டார்கள். அந்த சமயம் நபிகளார் அவர்கள் மிகவும் சாதாரணமாக உடைந்த தட்டை எடுத்து விட்டு வேறோரு தட்டை கொடுத்து உங்கள் அன்னை ரோசப்பட்டு விட்டார்கள் என்று கூறினார்கள். இது போன்ற பல சம்பவங்களை அறிந்து நமது குணங்களை உயா்த்திட ஷேக் முஜாஹித் அவர்களின் உரையைக் கேட்கவும்…

Leave a Reply