நரகத்தை அஞ்சிக்கொள்ளுங்கள்!

ஒரு ஸஹாபி அண்ணலாரிடம் ” யா ரசூலுல்லாஹ்! என்னிடம் சில அடிமைகள் இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு துரோகம் செய்கிறார்கள், என்னை பொய்ப்படுத்துகிறார்கள், நான் எதையாவது செய்தால் எனக்கு மாறு செய்கிறார்கள். அதனால் நான் ஆத்திரத்தில் அவர்களை அடித்துவிடுகிறேன். திட்டிவிடுகிறேன். இதைப்பற்றி நீங்கள் என்ன நினைகிறீர்கள் ” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ” உனது அடிமைகளை நீர் அடிப்பதும், திட்டுவதும் அவர்கள் செய்த துரோகத்திற்கு அதிகமாக இருக்குமானால், அதற்காகவும் நாளை மறுமையில் உமக்கு நரகத்தில் தண்டனை உண்டு” என்று சொன்னார்கள். இதைகேட்ட அந்த நபித்தோழர் கண்ணீர் வடித்தவராக, ” அல்லாஹ்வின் தூதரே! நான் எனது அடிமைகளுக்கு விடுதலை அளித்துவிட்டேன். இவர்களை அடிமைகளாக வைத்திருப்பதை விட நான் நரக நெருப்பிற்கு பயப்படுகிறேன்.. இதற்கு நீங்கள் சாட்சி ” என்று சொல்லி, தனது அடிமைகளை விடுதலை செய்துவிட்டு மேலும் அறிய கீழே உள்ள வீடியோவைப் பார்க்கவும்..

Leave a Reply