சுவனத்தை தடை செய்யும் காரணிகள்

எல்லா முஸ்லிம் முஃமின்களின் இலட்சியம் சுவர்க்கத்தை அடைய வேண்டும் என்பதாகும். நாம் செய்யும் நல்அமல்களின் இறுதி எதிர்பார்ப்பு சுவர்க்கமாகும். எனினும் அல்லாஹ்வும் ரசூலும் மனிதர்களில் சிலர் சுவர்க்கம் செல்ல மாட்டார்கள் என்று கூறியுள்ளார்கள். எனவே வெற்றியை இலக்காக கொண்ட நாம் அந்த பண்புகள் யாவை, அவர்கள் யார் என்பதை கண்டிப்பாக அறிய வேண்டும். அந்த கெட்ட பண்புகளில் முதன்மையானது அல்லாஹ்விற்கு இணைவைப்பதாகும். சிலை வணக்கம் தான் இணைவைப்பு என்று பல முஸ்லிம் நினைக்கின்றார்கள். இன்னும் சிலர் நாம் அல்லாஹ்வையன்றி மற்றவற்றிடம் பிராத்தனை புரிவதில்லையே – வணக்கம் செலுத்துவதில்லையே என்று நினைக்கலாம். ஆனால் சோதனையாக சில கஸ்டங்கள் வாழ்வில் வந்து விட்டால் ஈமானின் உறுதி கலைந்து அல்லாஹ்வையன்றி உள்ளவற்றிடம் வணக்கத்தை செய்கின்றோம். இது மிகவும துரோகமான செயலாகும். இந்த ஷிர்க் நம்மிடம் புகுந்து விட்டால் – சுவர்க்கம் தடையாக ஹராமாக விடும். இந்த பாவத்தை அல்லாஹ் மன்னிப்பதே இல்லை. அல்லாஹ்வை மட்டுமே வணங்கி கட்டளைகளை சரியாக செய்தாலும் நம்மிடம் சில குணங்கள் இருந்தாலும் சுவர்க்கம் செல்ல முடியாது. பெற்றோருக்கு நோவினை செய்பவன், குடும்பத்தினரின் செயல்களில் பாராமுகமாக – கண்டிக்காமல் இருக்கும் தலைவன், ஆன்களுக்கு ஒப்பாக நடக்கும் பெண்கள், இரத்த உறவை துண்டித்து வாழ்பவன் மற்றும் உள்ள காரணிகளை அறிய ஷேக் ஸமீம் ஸீலானி அவர்களின் இந்த வீடியோவைப் பார்க்கவும்…

Leave a Reply