சுவனத்தின் வர்ணனைகள்

நாம் இறைவனை வணங்குவதற்கு சுவர்க்கம் நரகம் மட்டுமே காரணமாக இருக்கக் கூடாது. காரணம் அவன் நம்மை இதற்காகவே படைத்துள்ளான். அவன் நம்மை படைத்து பாதுகாத்து வருபவன். அல்லாஹ் நமக்க செய்துள்ள ஏராளமான நிஃமத்துக்களாகவே நாம் அவனை வணங்க கடமைப்பட்டுள்ளோம். அல்லாஹ்விற்கு இந்த உலகில் நன்றியுள்ளவனாக அவனுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தால் அல்லாஹ் மறுமையில் சுவர்க்கத்தையும் அதிகமான ஒன்றையும் கொடுப்பதாக கூறியுள்ளான். ஆக சுவர்க்கத்தை தவிற மற்றொன்று அதைவிட சிறப்பானது ஒன்று உள்ளதாகும். அது தான் அல்லாஹ்வின் முழுப் பொறுத்தமும் அல்லாஹ்வைப் பார்க்கும் பாக்கியமுமாகும். சுவர்க்கம் என்பது மட்டும் தான் உண்மையான நிரந்தரமான வாழ்க்கை என்று அல்லாஹ் கூறுகிறான். மாறாக இந்த உலகை ஒரு சோதனையாக ஒரு அலங்காரமாக குறிப்பிடுகிறான். மேலும் சுவர்க்கம் என்பது எந்த கண்களும் பார்க்காத காதுகளும் கேட்காத எந்த மனதும் சிந்திக்காத ஒன்று தான் சுவர்க்கம். இந்த உலகில் நாம் அனுபவிக்கும் இன்பங்கள் சுவர்க்கத்தின் இன்பங்களுடன் ஒப்பிட்டால் ஊசி முனியில் ஒட்டடியிருக்கும் நீரை கடலுடன் ஒப்பிடுவதற்கு சமமாகும். மேலும் சுவர்க்கத்தின் வர்ணனைகள் பற்றி மேலும அறிய ஷேக் முஜாஹித் அவர்களின் இந்த வீடியோவைப் பார்க்கவும்..

Leave a Reply