ரமளானும் இறையச்சமும்

ரமலானின் நோக்கம் என்ன என்பதை நோன்பு நோற்கும் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும். நோன்பு நம் மீது கடமையாக்கியதற்கு பலர் பல காரணங்களை பகுத்தறிவு விதமாக கூறுகிறார்கள். பசியும் பட்டினியும் தான் ரமலானின் நோக்கமா ?? உடலை ஆரோக்கியமாக மாற்றுவது தான் ரமலானின் நோக்கமா ?? ஆனால் அல்லாஹ் தனது திருமறையில் ”ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம் . அல்குர்ஆன் 2-183”. மனிதர்கள் கண்டிப்பாக நோன்பு நோற்க வேண்டும். அல்லாஹ் எதற்கு கடமையாக்கினான்? அல்லாஹ்வை அஞ்ச வேண்டும் – பயப்பட வேண்டும் – இறையச்சம் வளர வேண்டும் என்பதற்காகத் என்பதை நாம் முழுமையாக உணர வேண்டும். காரணம் இறையச்சம் தான் ஒரு மனிதன் எல்லா நிலையிலும் அவன் இட்ட கட்டளைகளை முழுமையாக நிறைவேற்றி – அல்லாஹ் தடுத்தவற்றை தவிர்ந்து கொள்பவர்களாகும். ஆம் இத்தகையவர்கள் அடுத்தவர்கள் பார்த்தாலும் – பார்க்காவிட்டாலும் இறைவனை மட்டுமே அஞ்சக் கூடியவர்கள். தக்வாவுக்கு ஸஹாபாக்கள் விளக்கம் தரும்போது ”முற்களின் மீது நடக்கும் போது எவ்வாறு நடப்போமோ அவ்வாறு அல்லாஹ்வின் கட்டளைகளின் படி அவனுக்கு அஞ்சி வாழ்வதாகும்” மேலும் இது பற்றி அறிய ஷேக் அப்துல் பாஸித் புகாரி அவர்களின் இந்த வீடியோவைப் பார்க்கவும்..

Leave a Reply