அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவோம்

அல்லாஹ்வை வணங்குவதாக இருந்தால் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். பொதுவாக நமக்கு இந்த உலகில் யாராவது உதவி செய்திருந்தால் நாம் அந்த மனிதருக்கு விருப்பமானவற்றை செய்வோம்.. அவர் விரும்பாதவற்றை தவிர்ந்து கொள்கிறோம். ஆக ஏதோ சாதாரணம பெருமதியான ஒரு பொருளுக்காக நாம் இந்த அளவு நடக்கும் போது வல்ல நாயன் அல்லாஹ் நமக்கு எண்ணிலடங்காத அருட்கொடைகளை தந்து உள்ளானே.. அந்த அல்லாஹ்விற்கு நாம் எப்படி நடக்கின்றோம் என்பதை சிந்திக்க வேண்டும். அல்லாஹ் நமக்கு செய்த அருட்கொடைகளை நம்மால் எண்ணிவிடவோ அல்லது இவ்வளவு தான் என்று கணக்கிடவோ முடியாது. அந்த அளவு அவன் செய்த அருட்கொடைகள் – பாக்கியங்கள் கணக்கில்லாமல் உள்ளன. இந்த உலகில் உள்ள அமைப்பு நமது உடலின் அமைப்பு நமது உறுப்புகள் என்று எதனை சிந்தித்தாலும் எல்லாமே அல்லாஹ் நமக்காக செய்த அருட்கொடையாகும். அல்லாஹ் தான் நமக்கு செய்தான் என்ற சிந்தனை நம்மிடம் வந்தால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவோம். நம்மை விட பல வகையிலும் கீழ் நிலையில் உள்ள மக்களை சற்று நாம் சிந்தித்தால் நிச்சயம் அல்லாஹ் நமக்கு செய்த பாக்கியங்கள் தெரிய வரும். அல்லாஹ் எளிதாக திருப்தியடையக் கூடியவனாக இருக்கிறான். நாம் ஒவ்வொரு நிஃமத்திற்கும் திருப்தியுடன் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறினால் அல்லாஹ் திருப்தியடைகிறான். நன்றி செலுத்துவது என்பது நமக்கு மிகவும் எளிதானதாகும்.. மேலும் இது பற்றி விவரம் அறிய ஷேக் அப்பாஸ் அலி அவர்களின் இந்த வீடியோவைப் பார்க்கவும்.

Leave a Reply