நீங்கள் வெறுக்கக்கூடிய ஓன்று நன்மையாக அமையும் !

போர் செய்தல் – அது உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் – (உங்கள் நலன் கருதி) உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்;. ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள். (அல்குர்ஆன் 2:216)

..நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம். (அல் குர்ஆன் 4:19)

இந்த இரண்டு வசனங்களும் வெவ்வேறு விசயம் பற்றி பேசினாலும் இரண்டும் ஒரு பொதுவான கருத்தை நமக்கு தருகின்றது. நமக்கு வெறுப்பான விசயமாக இருந்தாலும் அவை பின்பு நன்மையாக அமையயும். ஆக நாளை என்ன நடக்கும் என்பதை நாம் அறிய மாட்டோம். அல்லாஹ் மட்டுமே தான் மறைவானவற்றை அறியக்கூடியவன். ஈமானின் ஒரு பகுதி தான் கலகத்ர் என்ற விதி பற்றியதாகும். எந்த காரியங்கள் நடந்தாலும் அவை நமக்கு நன்மையாகவோ தீமையாகவோ தெரியலாம் – அவைகள் அனைத்தும் அல்லாஹ்வின் மூலம் தான் ஏற்படும் என்பதை நம்ப வேண்டும். தீமை போன்று இன்று தெரிந்தாலும் – அவை மூலம் நமக்கு பின் நல்லதாக முடியும் என்பதை அறிய வேண்டும். மேலும் இந்த வசனத்தின் விளக்கம் பெற ஷேக் ஹிஸ்புல்லாஹ் அன்வாரி அவர்களின் இந்த வீடியோவைப் பார்க்கவும்….

Leave a Reply