உருகும் உள்ளங்கள் 1

நாம் எந்த அமல்களானாலும் தான, தர்மங்களாலும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ள ஒரு அடிப்படை வைத்துள்ளான். அல்லாஹ் நிச்சயமான நமது தோற்றத்தையோ உருவங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உள்ளங்களையும் அதன் பிரதிபலிப்பாக அமையும் செயல்களையும் மட்டுமே பார்க்கின்றான். எனவே நபிகளார் அவர்கள் கூறினார்கள் ” உடலில் ஒரு உறுப்பு பாதிப்பு அடைந்தால் உடல் முழுதும் பாதிப்படையும் ” என்றார்கள். ஆனால் இன்று நம்முடைய வாழ்க்கை முற்றிலும் மாற்றமாக உள்ளது. போலியான வாழ்க்கை அமல்கள் எல்லாம் பணத்தை – பதவியை அடிப்படையாக மாறி விட்டது. காரணம் நமது உள்ளங்கள் அல்லாஹ் நினைத்து உருகுவதற்கு பதிலாக இரும்பாக மாறி உள்ளது. குறைவான அழுகையும் அதிகமான சிரிப்பும் உள்ளதாக நமது வாழ்க்கை மாறி விட்டது. மரணத்தை நினைத்தோ, மண்ணறையை நினைத்தோ மறுமையை நினைத்தோ நாம் பயப்படுவதில்லை. நாம் இவைகளை அதிகம் சிந்தித்தால் நமது உள்ளங்கள் உருகி விடும். மேலும் இது பற்றிய விளக்கங்கள் அறிய ஷேக் அன்ஸார் ஹுசைன் ஃபிர்தௌஸி அவர்களின் இந்த வீடியோவைப் பார்க்கவும்..

Leave a Reply