ஸஅது பின் முஆத் (ரலி) – அற்புத வாழ்க்கை

அல்லாஹ் இந்த மார்க்கத்தை தேர்ந்தெடுத்துள்ளதால், அதனை லோங்கச் செய்ய அல்லாஹ் மனிதர்களை தேர்ந்தெடுத்துள்ளான். இதன் காரணம் அவர்களை அல்லாஹ் உயர்த்துகிறான். இதில் முதன்மையானவர்கள் இறைத்தூதர்களாவர். அதன்பின் அந்த திருத்தூதர்களுடன் வாழ்ந்த அவர்களுடன் பின்பற்றிய அவர்களது தோழர்கள் இரண்டாம் இடத்தைப் பிடிப்பர். முஹம்மது நபி ஸல் அவர்கள் தான் அனைத்து மக்களையும் விட , நபிமார்களையும் விட முதல் அந்தஸ்தைப் பெறுகிறார்கள். அதற்கடுத்த அந்தஸ்தைப் பெறுபவர்கள் நிச்சயமாக ஸஹாபாக்களாகும். இவர்களின் அந்தஸ்தை மற்றவர்கள் பெற முடியாது. இவர்கள் நபிகளாருடன் நபித்துவம் வந்த காலத்தில் வாழ்ந்து அவர்களை ஈமான் கொண்டு நல் காரியங்களும் தியாகங்களும் செய்தவர்களாகும். இதற்கு ஆதாரமாக நபிகளார் அவர்கள் ”எனது சமுதாயம் தான் சிறந்தது” என்று கூறியுள்ளார்கள். எனவே இந்த உலகில் மற்றவர்களை விட ஸஹாபாக்கள் சிறந்தவர்கள் என்பதற்கு எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இந்த ஸஹாபாக்களை அல்லாஹ் பிரத்யோகமாக தேர்ந்தெடுத்துள்ளான் என்பதையும் நாம் அறிய வேண்டும். இந்த வகையில் நமக்கு படிப்பினை தரும் சம்வங்கள் பல ஸஹாபாக்களின் வாழ்க்கையில் உள்ளன. எனினும் நாம் அவர்களில் ஒருவர் பற்றித் பார்க்க உள்ளோம். அந்த ஸஹாபி 31 வயதில் இஸ்லாத்தை ஏற்று 37 ஆவது வயதில் மரணித்தவராகும். இவர்கள் மதினாவைச் சேர்ந்தவர்களாகும். இந்த தியாகச் செம்மலைப் பற்றி மேலும் அறிய ஷேக் மன்சூர் மதனி அவர்களின் வீடியோவைப் பார்க்கவும்.

Leave a Reply