இஸ்லாம் கூறும் வார்த்தை ஒழுக்கங்கள்

இஸ்லாம் கூறும் வார்த்தை ஒழுக்கங்கள்

பொதுவாக வார்த்தைகளில் இவை இவை கெட்டவை என்பதை நாமாகவே அறிந்திருப்போம். இவற்றை மட்டுமல்லாது வேறு சில வார்த்தைகளையும் இஸ்லாம் தடைசெய்துள்ளது. அவைகள் சாதாரணமாகத் தெரியலாம் தவறு என்று தெரியாமல் பயன்படுத்தினாலும் அவைகள் பாவமாகிவிடும். உதாரணமாக எதாவது நமக்கு மாற்றமாக நடந்தால் நாம் காலத்தை திட்டுகிறோம். மாற்றமான தட்ப்பவெட்ப சூழ்நிலை ஏற்பட்டால் உடனே காலநிலையை நாம் ஏசுகிறோம். இவைகளை நபிகளார் தடுத்துள்ளார்கள். காரணம் அல்லாஹ் தானே காலமாக உள்ளதாக கூறி உள்ளான். மேலும் இது பற்றி அறிய ஷேக் முஜாஹித் ரசீன் அவர்களின் வீடியோவைப் பார்க்கவும்.

Read more

சுவனத்தின் வர்ணனைகள்

சுவனத்தின் வர்ணனைகள்

நாம் இறைவனை வணங்குவதற்கு சுவர்க்கம் நரகம் மட்டுமே காரணமாக இருக்கக் கூடாது. காரணம் அவன் நம்மை இதற்காகவே படைத்துள்ளான். அவன் நம்மை படைத்து பாதுகாத்து வருபவன். அல்லாஹ் நமக்க செய்துள்ள ஏராளமான நிஃமத்துக்களாகவே நாம் அவனை வணங்க கடமைப்பட்டுள்ளோம். அல்லாஹ்விற்கு இந்த உலகில் நன்றியுள்ளவனாக அவனுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தால் அல்லாஹ் மறுமையில் சுவர்க்கத்தையும் அதிகமான ஒன்றையும் கொடுப்பதாக கூறியுள்ளான். ஆக சுவர்க்கத்தை தவிற மற்றொன்று அதைவிட சிறப்பானது ஒன்று உள்ளதாகும். அது தான் அல்லாஹ்வின் முழுப் பொறுத்தமும் அல்லாஹ்வைப் பார்க்கும் பாக்கியமுமாகும். சுவர்க்கம் என்பது […]

Read more

மனிதனின் உள நோய்கள்!

மனிதனின் உள நோய்கள்!

நோன்பு நோற்பதன் அடிப்படை என்பது சாப்பிடாமல் குடிக்காமல் இருப்பது மட்டுமே அல்ல. மாறாக உள்ளம் தூய்மை அடைய வேண்டும். யார் மோசமான அதாவது பொய் சாட்சியம் போன்ற மோசமான செயல்களிலும் இருந்து விட்டு விட வில்லையோ அவர் உணவை – குடிப்பை விட்டு விடுவதால் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை என்பதாக நபிகளார் ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள். நோன்பு என்பது நமக்கு இறையச்சத்தை ஏற்படுத்த வேண்டு்ம். ஆக ரமளான் நமக்கு வணக்கத்தை மட்டுமல்லாது சிறந்த குணங்களையும் பயிற்சியளிப்பதாக இருக்க வேண்டும். இன்று நம்மில் பலர் […]

Read more

துஆக்கள் ஏன் அங்கீகரிக்கப்படுவதில்லை?

துஆக்கள் ஏன் அங்கீகரிக்கப்படுவதில்லை?

பொதுவாக துவா என்பது ஒரு முஃமினோடு தொடர்புடையது. துவா என்பது வணக்கமாகும். எந்த ஒரு வணக்கம் செய்தாலும் அதில் துவா தான் முக்கியமானதாக அமைந்திருக்கும்.  நமது துவாக்கள் ஏற்றுக் கொள்ளப்படாமைக்கு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக நாம் கேட்கும் துவாவில் ஒரு ஈடுபாடு – கவணம் இல்லாமையாகும். அடுத்து அல்லாஹ்விடம் ஏன் கேட்கனும்.. அவனுக்குத் தானே எல்லாமே தெரியுமே என்ற ஒரு சிந்தனையுடன் கடமைக்காக துவா கேட்பது. ஆனால் நாம் அல்லாஹ்விடம் மனம் திறந்து நமது அடிமைத்தனத்தைக் காட்ட வேண்டும். அதைத் தான் அல்லாஹ் […]

Read more

அறிஞர்களை உருவாக்கிய அன்னையர்கள்!

அறிஞர்களை உருவாக்கிய அன்னையர்கள்!

பொதுவாக ஒரு குழந்தை சிறந்து விளங்க தாய், தந்தை இருவரின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். அதிலும் அந்த குழந்தையின் முன்னேற்றத்திற்க பெரும் பங்கு வகிப்பது தந்தையினுடையதாகும். இது தான் பொதுவான விதி. ஆனால் நாம் வரலாற்றைப் பார்க்கும் போது பல இஸ்லாமிய அறிஞர்களை தாய் தனது பெரும் முயற்சியால் உருவாக்கியதைப் பார்க்கலாம். காரணம் அந்த தாய்மார்கள் ஆரம்பத்திலேயே சரியான குறிக்கோளை நிர்ணயத்து அதற்கேற்ப ஆர்வத்துடன் செயல்பட்டார்கள். அந்த குறிக்கோளை நிறைவேற்றிட பெரும் கஷ்டங்களை சுமந்துள்ளனர். உதாரணமாக சுலைம் ரழி அவர்கள் தனது குழந்தைக்கு முதல் […]

Read more

மனைவிக்கும் தாயிற்கும் இடையில் ஒரு ஆண்மகன்!

மனைவிக்கும் தாயிற்கும் இடையில் ஒரு ஆண்மகன்!

ஒரு ஆண்மகனின் உழைப்பின் இலட்சியம் குடும்ப சந்தோஷமாகும். நாம் உழைப்பதின் மூலம் குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் குடும்பம் எந்த சூழ்நிலையிலும் சந்தோசமாக தன்னிறைவாக வாழவேண்டும் என்பது தான் நமது நோக்கமாகும். அப்படி குடும்ப வாழ்க்கையில் சந்தோசம் – மகிழ்ச்சி அமையாவிட்டால் வாழ்க்கையில் விரக்தி ஏற்படும். எனினும் நமது பொருளாதாரம், உழைப்பிற்குப் பின்பும் இப்படி ஒரு சந்தோசமற்ற குடும்ப நிலை வரும்போது அதிகமாக பாதிக்கப்படுபவர் ஆண்மகன் ஆகும். அவர் பெற்றோருக்கு சரியான மகனாக, மனைவிக்கு பிடித்த கணவனாக திகழ வேண்டும். நம்மில் 25 முதல் 30 […]

Read more

இஸ்லாம் சிறந்த வாழ்க்கைக்கான உத்தரவாதம்!

இஸ்லாம் சிறந்த வாழ்க்கைக்கான உத்தரவாதம்!

மனித சமுதாயத்திற்கு அல்லாஹ் வழங்கிய பல அருட்கொடைகளில் (நிஃமத்) மிகவும் சிறந்தது இஸ்லாம் என்ற நேரிய மார்க்கம் தான். அல்லாஹ் தனது நிஃம்ததை பூர்த்தியாக்கி விட்டேன் என்று இஸ்லாம் பற்றிக் கூறுகிறான். பகுத்தறிவு, குடும்பம், பார்வை, நிம்மதி, நட்பு, பொருளாதாரும் இப்படி பல நிஃமத் கிடைத்திருந்தாலும் அதனை முழுமையாக அனுபவிக்க ஒரு முறைமை வேண்டுமெனில் நிச்சயம் இஸ்லாம் என்ற வழிகாட்டல் நம்மிடம் இருக்க வேண்டும்.. எனவே நாம் எதை இழந்தாலும் இஸ்லாம் என்ற நிஃமத்தை இழக்கக் கூடாது. இஸ்லாம் நம் வாழ்க்கைக்கு எப்படி அருளாகும் […]

Read more

கவலையும் துன்பத்தையும் எவ்வாறு அணுகுவது (V)

கவலையும் துன்பத்தையும் எவ்வாறு அணுகுவது (V)

இந்த உலகில் மக்களில் பலர் கவலைப்படுவது எல்லாம் தனக்கு தற்போது ஏற்பட்டுள்ள துன்பத்தை போக்குவது எப்படி என்பது தான். உண்மையில் இஸ்லாத்தில் சேர்ந்தால் – உண்மையான முஸ்லிமாக வாழ்ந்தால் சோதனை, துன்பம் இல்லாமல் வாழலாம் என்பது கிடையாது. ஆனால் உண்மை முஸ்லிமாக வாழ்ந்தால் அவனது மனம் பக்குவப்பட்டு ஒரு அதிசியமிக்கதாக ஆகிவிடுகிறது. ஆம் அவனுக்கு எந்த ஒரு இன்பமோ அல்லது பெரிய துன்பமோ ஏற்பட்டால் அவனது அன்றாட வாழ்க்கையையோ அல்லது மனதோ பெரிய பாதிப்படையாது. ஆம் அவன் இன்பம் ஏற்படும் போது இறைவனுக்கு நன்றி […]

Read more
1 2