நீங்கள் வெறுக்கக்கூடிய ஓன்று நன்மையாக அமையும் !

போர் செய்தல் – அது உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் – (உங்கள் நலன் கருதி) உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்;. ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள். (அல்குர்ஆன் 2:216) ..நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம். (அல் குர்ஆன் 4:19) இந்த இரண்டு வசனங்களும் வெவ்வேறு விசயம் பற்றி […]

Read more

அல்குர்ஆனின் வெளிச்சத்தில் வாழ்வோம்

அல்குர்ஆனின் வெளிச்சத்தில் வாழ்வோம்

அல்லாஹ் மனிதர்களையும் ஜின்களையும் அதே போன்று கோடான கோடி வஸ்துகளையும் படைத்துள்ளான். ஆனால் அல்குர்ஆன் என்பது படைப்பு அல்ல. மாறாக இது அல்லாஹ்வின் (கலாம்) பேச்சாகும். இது அவனுடைய ஸிஃபத்தாகும். இது அல்லாஹ்வுடன் தொடர்புடையது.  அல்குர்ஆன் பற்றி அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான் ”ஈமான் கொண்டார்களே அவர்களுக்கு, அவர்களுடைய இருதயங்கள் அல்லாஹ்வையும், இறங்கியுள்ள உண்மையான (வேதத்)தையும் நினைத்தால், அஞ்சி நடுங்கும் நேரம் வரவில்லையா? மேலும், அவர்கள் – முன்னால் வேதம் கொடுக்கப்பட்டவர்களைப் போல் ஆகிவிட வேண்டாம், (ஏனெனில்) அவர்கள் மீது நீண்ட காலம் சென்ற […]

Read more

அழவைத்த அல்குர்ஆன் வசனங்கள்

அழவைத்த அல்குர்ஆன் வசனங்கள்

இந்த உலகில் எதுவுமே தெரியாமல் பிறந்த போது நாம் பேசியது அழுகை தான். ஆனால் இன்று நமது அழுகை இந்த உலக ஆசாசபாசங்களுக்காக பயன்படுத்துகிறோம். இறப்பு, நோய், சொத்து சுகங்கள் இழப்பின் போது அழுகின்றோம். ஆனால் மறுமையை நினைத்து அழுவது இல்லை. திருமறையை ஓதும்போது அழுவது இல்லை. அல்குர்ஆன் மலைமீது இறக்கப்பட்டால் சுக்கு நூறாகிவிடும் என்று அல்லாஹ் திருமறையில் கூறுகிறான். அல்லாஹ் தனது திருமறையில் ”ஈமான் கொண்டார்களே அவர்களுக்கு, அவர்களுடைய இருதயங்கள் அல்லாஹ்வையும், இறங்கியுள்ள உண்மையான (வேதத்)தையும் நினைத்தால், அஞ்சி நடுங்கும் நேரம் வரவில்லையா? […]

Read more

கருவியல் ஓர் ஆய்வு (AlQuran and Embryology)

கருவியல் ஓர் ஆய்வு (AlQuran and Embryology)

அல்லாஹ்  மனிதனை சிந்திக்கச் சொல்கிறான். எவன் சிந்தித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கையை வளர்க்கின்றானோ அவனைத் தான் விரும்புகிறான். காரணம் இவன் எல்லா நிலையிலும் அல்லாஹ்வை பயந்து வாழ்வான் – அவனது சட்ட திட்டங்களை முழுமையாக மதித்து நடப்பான். குருட்டுத்தனமாக அல்லாஹ்வை நம்புகிறவர்களை அல்லாஹ் விரும்புவதில்லை.   அல்லாஹ்விடம் ”நான் அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனாலும் எனது மனது திருப்தியடைய .. இறந்தவர்களை நீ எப்படி உயிர் கொடுக்கின்றாய் என்பதை எனக்க காட்டு” என்று  இபுறாஹிம் அலை அவர்கள் கேட்டதை அல்குர்ஆனில் பாராட்டிக் கூறுகிறான் .  அல்லாஹ் […]

Read more

கலப்படம் இல்லாத இஸ்லாத்தை பரப்புவோம்!

கலப்படம் இல்லாத இஸ்லாத்தை பரப்புவோம்!

அன்று 1947ல் இலங்கையிலிருந்து மார்க்கக் கல்வியைக் கற்க இந்தியா, பாகிஸ்தான் சென்று இறுதியில் மதினமா நகர் அடைந்தார். அல்லாஹ்வின் அருளால் சிறந்த அறிஞர்களின் மூலம் மார்க்க கல்வியை  சிறப்புற கற்று திரும்பியவர்கள் தான் அஷ்ஷெய்க் அப்துல் ஹமீத் அல்பக்ரி (ரஹ்) ஆவார்கள். அவர்கள் பிறந்த ஊர் மட்டுமல்லாது இலங்கை முழுக்க தவ்ஹீத் கொள்கையை பரப்பினார்கள். அல்லாஹ்வின் உதவி அவர்களது சேவைக்கு கிடைத்து தௌஹீது வியாபித்துள்ளது. பொதுவாக சத்தியம் பரவ முக்கியமாக 4 அம்சங்களை சொல்லலாம். அதில் முதலாவது அல்லாஹ்வின் உதவி (நேர்வழி காட்டல்). இரண்டாவதாவதாக […]

Read more

அல்குர்ஆன் உங்கள் உள்ளத்தோடு

அல்குர்ஆன் உங்கள் உள்ளத்தோடு

அல்குர்ஆன் நம்முடைய வேதம் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்கிறோம். இந்தக் குர்ஆனைப் பற்றி மற்றவர்கள் ஏதாவது பேசிவிட்டால் உடனே நாம் ஆர்ப்பாட்டத்தில் இறங்குகிறோம்.ஆனால் பெரும்பாலானவர்கள் அந்த குர்ஆனை ஓத அறியாதவர்களாக உள்ளோம். ஒரு எழுத்துக்கு 10 நன்மை உள்ள இந்த புனித குர்ஆனை ஓதுவதும் இல்லை சிந்தப்பதும் இல்லை. அல்லாஹ் ”உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன்.(25 – 1)” என்று கூறுகிறான். நபிகளார் ஸல் அவர்கள் மிகவும […]

Read more

குர்ஆனை கண்டு ஏன் அஞ்சுகிறார்கள்?

குர்ஆனை கண்டு ஏன் அஞ்சுகிறார்கள் ?

பொதுவாக அல்குர்ஆனைக் கண்டு பலர்கள் அஞ்சுகின்றார்கள். ஆனால் அல்லாஹ் அஞ்சுபவர்களுக்கு இந்த குர்ஆன் படிப்பினையாக உள்ளதாக அல்லாஹ் கூறுகிறான். ஒரு போர்ச்சூழ்நிலையில் முன்னால் பிரிட்டனின் முதல் மந்திரி tவில்லியம் எட்வர்ட் கிளேட்ஸ்டோன் கூறினார் ”முஸ்லிம்களை அல்குர்ஆன் அவர்களின் கைகளில் இருக்கும் வரை ஒன்றும் செய்ய முடியாது – ஆட்சி செய்ய முடியாது – அடிமைப்படுத்த முடியாது” என்று கூறினார் என்றால் எந்த அளவு அவர்கள் இந்த குர்ஆனின் சக்தியை அறிந்து பயந்துள்ளாா் என்பதை சிந்திக்கவும். மேலும் இந்த தலைப்பில் அறிய சேக் தாஹா முஹம்மது […]

Read more