அன்பான மனைவி !

திருமண வாழ்வு என்பது பிரச்சனையையும் உள்அடக்கியது தான். சரித்திரத்தில் பார்த்தாலும் இன்றைய சூழ்நிலையில் எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சியும் பிரச்சனையும் கலந்தது தான் திருமண வாழ்க்கை. அன்பான மனைவி என்பவள் அழகிய முறையில் நடந்து கொண்டால் அன்பாக பண்பாக நடந்து கொண்டால் அன்றாடம் ஏற்படும் பிரச்சனைகள் எல்லாம் சீராகி விடும். ஒரு பெண்ணுக்கு திருமண வாழ்வு என்பது ஒரு அமானிதம். அல்லாஹ் அளித்த அருட்கொடை. நம் சமுதாயத்தில் இன்னும் பலர் வயதுகள் பல கடந்தும் கண்ணிகளாக இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் நமக்கு மனவைி என்ற அந்தஸ்து […]

Read more

குர்ஆன் சுன்னாவை விளங்க சஹாபாக்களின் விளக்கம் அவசியம்

உங்களிடத்தில் இரண்டை விட்டுச் செல்கிறேன். அதை பின்பற்றும் காலமெல்லாம் நீங்கள் வழி தவறமாட்டீர்கள்! ஒன்று அல்லாஹ்வின் வேதம். மற்றொன்று எனது வழிமுறை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆக இன்று இஸ்லாம் என்று கூறுபவர்களும் குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுபவர்கள் என்று கூறுபவர்களும் எதிர் எதிரான விசயத்தைக் கூறுவதை நாம் பார்க்கலாம். இது எப்படி சாத்தியம்? காரணம் குர்ஆன் ஹதீஸை சரியாக அறியாத தன்மையாகும். உதாரணமாக ஒருவர் கப்ரை பூசுவதற்கு குர்ஆனிலிருந்து வித்தியாசமாக தன் இஸ்டத்திற்கு அர்த்தம் எடுத்து விளக்கம் அளிப்பதைப் பார்க்கலாம். சவ்வாஹா என்பதை […]

Read more

ஷஅபான் மாத சிறப்புகளும் பித்அத்களும்

தீனுல் இஸ்லாம் எல்லா விசயங்களிலும் ஒரு நடுநிலையான போக்கை கொண்ட மார்க்கமாகும். வணக்கமானாலும் சரி மற்றவைகளானாலும் இதே நிலை தான். ஒருவர் இரவு முழுக்க வணங்க வேண்டுமென்றாலும அல்லது தினந்தோரும் பகலில் நோன்பு பிடிக்க வேண்டுமென்றாலும் அனுமதிக்காது. நபிகளார் ஸல் அவர்கள் ஷஃபான் மாதம் வந்து விட்டால் தொடர்ந்து நோன்பு பிடிப்பார்கள். அல்லாஹ் அவர்களுக்கு கொடுத்த தனி சிறப்பால் இவ்வாறு நோன்பு நோற்பார்கள். ஆனால் மற்றவர்களுக்கு தடை செய்துள்ளார்கள். இந்த மாதத்தில் தான் நமது வருடாந்திர அமல்கள் எல்லாம் அல்லாஹ்விடம் எடுத்துச் செல்லப்படுவதால் இந்த […]

Read more

இஸ்லாத்தில் ஜின் ஓர் ஆய்வும் மூட நம்பிக்கையும்

நம் சமூகத்தில் ஏராளமான மூடநம்பிக்கைகள் உள்ளன. பாம்பு, பேய், அர்வாஹ், ஜின் என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கதை உண்டு. அடிபட்ட பாம்பு அடித்தவர்களின் உருவத்தை கண்ணில் படமாக்கி வைத்துக் கொள்ளும் என்றும் அதனுடைய ஜோடி அடித்தவரை கொத்தும் என்றும் ஒரு கதை உள்ளன. இந்த கதையை நம்பும் நாம் நமது பகுத்தறிவுக்கு கொஞ்சம் வேலை கொடுத்தால்… இது பொய் என்று தெரிந்து விடும். பகுத்தறிவு உள்ள மனிதனால் படத்தை (போட்டோ) வைத்து மனிதனின் இருப்பிடத்தை கண்டு கொள்ள முடியாத போது எப்படி பாம்பு கண்டு […]

Read more

முன்னோர்களின் வாழ்விலிருந்து பெறும் படிப்பினைகள்

அல்லாஹ் ரசூலை முறையாக பின்பற்றிய மற்றும் அல்லாஹ் ரசூலால் பாராட்டப்பட்ட ஒரு சமுதாயம் நமக்கு முன்மாதிரியாக உள்ளது. அவர்களை நாம் பின்பற்றுவதால் இரு உலகிலும் வெற்றி பெறலாம். அவர்கள் தான் நபிகள் ஸல் அவர்களின் தோழர்களான ஸஹாபாக்கள். அந்த வரலாற்றில் நமக்கு பல வழிகாட்டல் மற்றும் படிப்பினைகள் உள்ளன. கஅப் பின் மாலிக் அவர்களின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைப் பார்க்கலாம். தபூக் போருக்கு அழைப்பு வந்த போது ”பேரித்தம் பழம் அறுவடைக்கான சூடான காலம். மேலும் தூரமான பயணம். இந்த சூழலில் கஅப் […]

Read more

தொழுகையின் முக்கியத்துவம்,

அல்லாஹ் தனது திருமறையில் “தொழுகையை பயபக்தியுடன் தொழும் முஃமின்கள் வெற்றி பெற்றதாகக்” கூறுகிறான். தொழுகையை விண்ணிலே நபிகளாரை அழைத்து கடமையாக்கினான். ஆரம்பத்தில் மக்காவிலேயே கடமையான இந்த தொழுகை என்பது முஃமின்கள் வாழ்வில் இறுதி மூச்சு வரை கண்டிப்பாக நிறைவேற்றப்பட வேண்டும். தண்ணீர் கிடைக்காமை, போர், முதுமை, நோய், பிரயாணம் என்ற எந்த சூழ்நிலையிலும் தொழுகையை விடமுடியாது. ஆனால் நாம் பாராமுகமாக நினைத்த நேரத்தில் தொழுகிறோம். வேண்டுமென்று ஒரு தொழுகையை விட்டாலும் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிடுவான் என்றும் ஜமாத்தை விடுபவர்கள் வெளிப்படையான முனாஃபிக்கள் மட்டுமே என்றும் […]

Read more

இஸ்லாம் கூறும் பிற சமூக உறவு

இஸ்லாம் கூறும் சட்டங்களில் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று அடியான் அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமை. தொழுகை நோன்பு போன்றன.. இவைகள் தவறும் போது அல்லாஹ் தாராளமாக மன்னிப்பான். இன்னொன்று மற்ற உயிரினங்களுக்கு மனிதர்களுக்கு செய்ய வேண்டியவைகளாகும். இவற்றில் தவறுகள் ஏற்படும் போது யாருக்கு நாம் தவறு செய்தோமோ அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனையுடனே அல்லாஹ் மன்னிப்பையே வைத்துள்ளான். எனவே நாய்க்கு தண்ணீர் கொடுத்தவர் சுவர்க்கம் சென்றதையும் பூனையை கட்டிப் போட்டு உணவு கொடுக்காமல் சாகடித்த பெண் நரகம் சென்றதையும், மரம் […]

Read more

மதி மயக்கும் உலக வாழ்வும் உயிர் பிரியும் நேரமும்

நபிகளார் அவர்கள் கூறினார்கள் ”இவ்வுலகம் என்பது ஒரு முஃமினுக்கு சிறைச்சாலையாகும். நிராகரிப்பர்வகளுக்கு இந்த உலகம் சுவர்க்கம்”. அதற்காக முஃமின்கள் இந்த உலகை வெறுத்து ஒதுக்கி விட முடியாது. காரணம் நபிகளார் வழிகாட்டல் என்பது துறவரம் அல்ல. ஒரு முறை மூன்று ஸஹாபிக்கள் நபிகளாரின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை அறிந்து ஒருவர் இரவெல்லாம் வணங்குவேன் என்றும் இன்னொருவர் பகலெல்லாம் நோன்பு பிடிப்பேன் என்றும் மூன்றாமவர் திருமணம் செய்ய மாட்டேன் என்று பேசிக் கொண்டார்கள். இதையறிந்த நபிகளார் அவா்கள் ”  நோன்பும் பிடிக்கின்றேன் – விடவும் […]

Read more
1 2