அல்குர்ஆன் உங்கள் உள்ளத்தோடு

அல்குர்ஆன் நம்முடைய வேதம் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்கிறோம். இந்தக் குர்ஆனைப் பற்றி மற்றவர்கள் ஏதாவது பேசிவிட்டால் உடனே நாம் ஆர்ப்பாட்டத்தில் இறங்குகிறோம்.ஆனால் பெரும்பாலானவர்கள் அந்த குர்ஆனை ஓத அறியாதவர்களாக உள்ளோம். ஒரு எழுத்துக்கு 10 நன்மை உள்ள இந்த புனித குர்ஆனை ஓதுவதும் இல்லை சிந்தப்பதும் இல்லை. அல்லாஹ் ”உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன்.(25 – 1)” என்று கூறுகிறான். நபிகளார் ஸல் அவர்கள் மிகவும அழகிய முறையில் விளக்கி உள்ளார்கள். எனினும் இன்னும் நம்மில் பலர் அல்குர்ஆன் நமக்கு புரியாது.. புரியமுடியாது என்று உளறுகிறார்கள். நபிகளார் ஸல் அவர்கள் நடமாடும் அல்குர்ஆனாக வாழ்ந்து காட்டினார்கள்.. மேலும் விவரம் அறிய ஷேக் கமாலுத்தீன் அவர்களது இந்த வீடியோவைப் பார்க்கவும்..

Leave a Reply