இலட்சியமிக்க முன்மாதிரி முஸ்லிம்!

ஒவ்வொரு முஸ்லிமின் நோக்கம் என்ன என்று கேட்டால் – சிலர் தொழுதால் போதும், நோன்பு பிடித்தால் போதும் இப்படி ஒவ்வொருவரும் வெவ்வேறு நோக்கத்தை வைத்துள்ளோம். யூதர்களிடம் கேட்டால் ஒரே மாதிரியாக இருப்பதைப் பார்க்கலாம். அவர்களின் பிள்ளைகளின் நோக்கமும் பெற்றோர்களின் நோக்கமும் ஒன்றாக அதாவது இந்த உலகத்தில் பொருளாதாரத்தில் உயர்ந்து இந்த உலகை ஆள வேண்டும் என்பதாகும். ஆனால் ஸஹாபாக்கள் எப்படி தங்களது பிள்ளைகளின் இலட்சியத்தை ஆக்கினார்கள் என்பதை சரித்திரத்தில் பார்க்கலாம். நம்மிடம் மார்க்க கல்வியின் முக்கியத்துவம் குறைந்து தூரமாகியுள்ளது. உபயோகமில்லாத யூதர்களின் கல்வி முறையை பிள்ளைகளுக்கு கொடுக்க நாம் பாடுபடுகின்றோம். இந்த கல்வி இஸ்லாத்திற்கு முரணானதாக உள்ளது. அன்று உமர் ரழி அவர்கள் தம் கவர்னருக்கு மடல் எழுதுகையில் ”யூதர்களின் செருப்பு அல்லது அவர்களது கட்டடம் போன்றவற்றில் கூட நீங்கள் அவர்களை பின்பற்ற வேண்டாம்” என்று எழுதினார்கள். சரித்திரத்தில் ஒரு நிகழ்ச்சியைப் பாருங்கள். அப்துல் உஸ்ஸா என்பவர் நபிகள் ஸல் அவர்களை பற்றி கேள்விபட்டு அவர்களை சந்தித்து இஸ்லாத்தை ஏற்க விரும்பினார்கள். அதற்காக அவர்கள் தன்னுடைய மாட்டு மந்தை ஆட்டு மந்தையையும் ஏன் உடுத்திய ஆடையையும் துறந்தார்கள். மேலும் விவரம் அறிய ஷேக் முஹம்மது அலி மஹ்ழரி அவர்களின் வீடியோவைப் பாருங்கள்..

Leave a Reply