பிறர் மானம் காப்போம்…!

அடுத்தவர்களின் மானத்தில் விளையாடுவது என்பது ஒரு இருளாகும். அரபா தினத்தில் நபிகளார் ஸல் அவர்கள் ”எப்படி இந்த நாள், இந்த மாதம் மற்றும் இந்த நகரமாகிய மக்கா புனிதமானதோ அது போல, உங்களுடைய உயிர், பொருட்கள் மற்றும் மானம் புனிதமானது” என்று கூறினார்கள். எனவே தான் இஸ்லாத்தை ஏற்க வேண்டுமெனில் ஐங்காலம் தொழுவேன், நோன்பு நோற்பேன், ஜகாத் கொடுப்பேன் என்பதோடு ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நலன் நாடுவேன், அவர்களின் தன்மானத்தை பாதுகாப்பேன் என்று ஸஹாபாக்கள் உடன்படிக்கை செய்தார்கள். தன் சகோதரரின் மானத்தை இவவுலகில் பாதுகாத்தால் அல்லாஹ் மறுமையில் அவரின் முகத்தை நரகத்தை விட்டு திருப்பி விடுகிறான். ஒரு முறை நபி ஸல் அவர்கள் முன்னிலையில் மாலிக் பிக் துக்சுன் ரழி அவர்கள், முனாஃபிக் என்று சிலர் கூறியதும் உடனே நபிகளார் அவர்கள் ” இப்படிச் சொல்லாதீர்கள். அவர் அல்லாஹ்விற்காக லாயிலாஹ் இல்லல்லாஹ் சொன்னவர்” என்று சொல்லி அவரின் மானத்தை பாதுகாத்தார்கள். அல்லாஹ் ”உமக்கு எது பற்றி அறிவு இல்லையோ அதைபற்றி பிடிவாதமாக பேசாதே” என்று கூறுகிறான். அடுத்தவர்கள் குற்றத்தை துருவி துருவி ஆராயாதீர்கள் என்பதும் அல்குர்ஆனின் போதனை! மேலும விளக்கம் பெற ஷேக் உமர் அலி ஃபிர்தௌஸி அவர்களின் இந்த வீடியோவைப் பார்க்கவும்…

Leave a Reply