அமல்களின் மூலம் ஈமானை அதிகரிப்பது எப்படி?

நாம் வணக்கங்கள் செய்து வருகிறோம். இதன் மூலம்  ஈமான் அதிகரிக்க வேண்டும். ஆனால் மிக மிக குறைவாகவே நமது ஈமான் அதிகபட்டுள்ளது. காரணம் அந்த வணக்கங்கள் பற்றிய முழு விவரத்தை நாம் அறியவில்லை. ஏனோ தானோ என்று கடமைக்கு செய்கின்றோம். அவ்வாறு அல்லாமல் நாம் செய்யும் நல் அமல்களுக்கு உரிய ஹதீஸை அறிந்து படித்திருக்க வேண்டும். அதே போல் அதன் சிறப்புகளைக் கூறுகின்ற ஹதீஸையும் அறிந்திருக்க வேண்டும். உதாரணமாக எந்த நல்ல அமல் செய்தாலும் உடனே அது பற்றிளும் அதக் சிறப்புகள் பற்றிளும் நபி மொழி ஞாபகத்துக்கு வர வேண்டும். அல்லாஹ் தக்வாவைப் பற்றி குறிப்பிடும்போது, ”எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் வழியை உண்டாக்குவான்” என்று  அல்குர்ஆன் 65 – 2 லும் மற்றும் 65-3ல் அவருக்கு, அவர் எண்ணியிராத புறத்திலிருந்து, அவன் உணவு (வசதி)களை அளிக்கிறான், மேலும், எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன்” என்றும் குறிப்பிடுகிறான். ஆக நல்ல வழிமுறைகளை அல்லாஹ் இறையச்சமுள்ளவர்களுக்கே காண்பிக்கின்றான். ஷேக் யூனுஸ் தப்ரீஸ் அவர்களின் இந்த வீடியோவில் நமது அமல்கள் மூலம் இறையச்சததை  எப்படி அதிகரிப்பது என்பதைப் பார்ப்போமாக!

Leave a Reply