அல்லாஹ்விடம் நெருங்குவோம்!

நாம் எந்த அளவு அல்லாஹ்விடம் நெருங்க முயற்சிக்கின்றோமோ அந்த அளவு அல்லாஹ் நம்மிடம் நெருங்குகிறான். ஷைத்தான் நமது பகைவன். அவனை நாம் பகைவனாக கருதி செயல்பட வேண்டும். நம்முடைய பிரதான எதிரியான ஷைத்தானை ஒரு போதும் நண்பனாக ஏற்றுகட் கொள்ளக் கூடாது. அவனை நாம் விரோதியாக ஆக்கினால் அல்லாஹ் நமக்கு நெருக்கமாகுகிறான். அல்லாஹ் தனது திருமறையில் பயபக்தியுடையவர்களுக்கு ”அச்சமும் இல்லை துக்கப்படவும் மாட்டார்கள்” என்கிறான். அக்கிரமம் செய்யக் கூடியவர்கள் ஒருவருக்கொருவர் நண்பர்களாக உள்ளனர். ஆனால் அல்லாஹ் மீது ஈமான் கொண்டு பயபக்தியுடையவர்வர்களுக்கு அல்லாஹ் நெருக்கமாக இருக்க விரும்புகிறான். ஒரு அடியான் கடமையான வணக்கங்கள் செய்தபின் உதிரியான நபிலான வணக்கங்கள் மூலம் அல்லாஹ்வை நெருங்கலாம். இப்படி நாம் ஜான் நெருங்கினால் அல்லாஹ் ஒரு முழம் நெருக்குகிறான். மேலும் கண்ணாக, காதாக, கைகளாக, கால்களாக மாறுகிறான் என்றால் அவனது செயல்கள் எல்லாம் நல்லதாக அமையும். ஒரு அடியான் பாவங்கள் பல செய்தாலும் அதனை உணர்ந்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு உள்ளம் உருகி கேட்டால் அல்லாஹ் மன்னித்து நெருக்கமாகுகிறான். உதாணரமாக 99 கொலைகள் செய்த ஒருவர் தனக்கு மன்னிப்பு கிடைக்குமா என்று ஒரு வணக்கஸாலியிடம் விசாரித்த போது கிடைக்காது என்று தெரிந்ததும் அவரையும் கொலை செய்தான். ஆனால் அவரும் பாவம் மன்னிக்கப்பட்ட வரலாற்றையும் மற்ற விவரங்களையும் அறிய ஷேக் அப்துல் வதூத் ஜிஃப்ரி அவர்களின் இந்த உரையைக் கேட்டகவும்…

Leave a Reply