முஃமினிடத்தில் இருக்கக் கூடாத பண்புகள்

நபிகளார் ஸல் அவர்கள் ”நான் சமுதாயத்திற்கு அனுப்பப்பட்டது எல்லாம் நற்பண்புகளை பூர்ணப்படுத்தவதற்காக.” என்று கூறினார்கள். எனவே நம்மிடம் நல்ல பண்புகள் இருக்க வேண்டும் அதே போல சில கெட்ட பண்புகள் நம்மிடம் இருக்கக்கூடாதவைகளாகும். அதில் முக்கியமானது நிஃபாக் அதாவது நயவஞ்சகத்தனம். உள் ஒன்று வைத்து வெளியில் வேறு பேசுவது – செயல்படுவதாகும். இவர்களை கண்டு கொள்ள நபிகளார் அவர்கள் மூன்று அடையாளங்களை அறிவித்துள்ளார்கள். முதலாவது அவன் பேசினால் பொய்யே பேசுவான். இரண்டாவது வாக்களித்தால் மாறு செய்வான். மூன்றாவது நம்பினால் நம்பிக்கைக்கு மோசடி செய்வான். அது போல் பொய் சொல்வது மிகவும் கெட்ட பண்பாகும். நாம் ஒருவரிடம் பொய் சொல்லி விட்டால் நமது மனது என்றென்றும் துடித்துக் கொண்டிருக்கம். இந்த பொய்யை கண்டு பிடித்து விடுவாரோ என்ற பயம். அதே போல் மோசடி என்பதும் ஒரு முஃமினிடத்தில் இருக்கக் கூடாது. அடுத்தது அப்படியிருக்குமோ அல்லது இப்படியிருக்குமோ என்ற யூகமாகும். இப்படி பல் கெட்ட பண்புகளில் இருந்து நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மேலும் இது பற்றி அறிய ஷேக் M.I.M ஜிபான் மதனி அவர்களின் வீடியோவைப் பார்க்கவும்….

Leave a Reply