வாழ்ந்து மடிந்தவர்கள் போதித்த வாழ்வியல் தத்துவங்கள்

நம் ஒவ்வொருவருக்கும் வாழ்வின் ஒரு நோக்கம் இருக்கும். குறைந்த பட்சம் நாம் நல்லபடியாக குடும்பத்துடன் சந்தோசமாக வாழ வேண்டும். அதற்கு தேவையான வீடு, சொத்து, பிள்ளைகளின் நல்ல படிப்பு போன்றன கிடைக்க வேண்டும் போன்றன தான் பெரும்பாலானோரின் நோக்கமாக இருக்கும். எனினும் நாம பல வருடங்கள் பல கஸ்டங்களை அனுபவித்து சொத்துக்களை ஊரில் வாங்குகிறோம். பல வருடங்கள் சென்று ஊரில் சென்றால் உண்மையில் நிம்மதியாக அனுபவிக்க முடியாமா என்றால் இல்லை என்பது தான் பதிலாக இருக்கும். காரணம் என்ன? நாம் ஊரில் சொத்து சுகங்களை அதிகரிக்கின்றோம். ஆனால் அவைகளை நம்மால் அனுபவிக்க முடியாது. முதுமையில் ஊரில் சென்றால் வேறு பல பிரச்சனைகள் வரும். ஆக நமது வாழ்வியல் தத்துவத்தில் எங்கோ தவறு உள்ளதாகத் தெரிகி்னறது. அப்படியென்றால் சரியான வாழ்வியல் தத்துவம் எங்கே கிடைக்கும் யார் தர வேண்டும் என்று சிந்தித்தால் – மனிதனை படைத்த இறைவன் தான் சரியான வாழ்வியல் தத்துவத்துக்கு வழிகாட்ட வேண்டும் என்பதை அனைவர்களும் ஒப்புக் கொள்வோம். சரி யார் அந்த இறைவன்… இந்துக்களை படைத்தது இந்துக் கடவுள், முஸ்லிம்களை படைத்தது முஸ்லிம் கடவுள் என்பதை யாரும ஏற்றுக் கொள்ள மாட்டோம். மாறாக ஒரே இறைவன் தான் நம் அனைவர்களையும் படைத்திருக்க வேண்டும என்பதை புரியலாம். ஆதி மனிதன் ஆதம் அலை அவர்களுக்கு வழிகாட்டல் பற்றி இறைவன் கூறுவதை அல்குர்ஆனில் பாாக்கலாம். மேலும் விவரங்கள் அறிய ஷேக் பொறியாளர் ஜக்கரியா அவர்களது இந்த வீடியோவைப் பார்க்கவும்…

Leave a Reply