எதிரிகளிடமும் நபிகளாரின் உயர்ந்த குணங்கள்

நபிகளார் ஸல் அவர்கள் தனது தோழர்கள் மற்றும் முஸ்லிம்களிம் மட்டும் தான் அன்போடு நடந்தார்கள் என்று பலரும் நினைப்போம். ஆனால் அவர்கள் மனிதர்கள் மட்டுமல்ல மிருகங்கள் பறவைகள் ஆகியவைகளுடனும் அன்பான முறையில் நடந்து காட்டினார்கள். அல்லாஹ் தனது திருமறையில் ”உம்மை உலக மக்கள் அனைவர்களுக்கும் அருட்கொடையாக அனுப்பியுள்ளோம்” என்றான். அவர்கள் நபியாக 40 வயதில் தேர்ந்தெடுக்கப்படும் முன்பே மிக அழகிய குணங்களுடனே வாழ்ந்துள்ளார்கள். அவர்கள் இஸ்லாத்தை – ஏகத்துவத்தை மக்காவில் எடுத்துரைத்த போது அவர்களுக்கு அந்த மக்கள் கொடுத்த இன்னல்கள் ஏராளம். ஆனால் எந்த சூழ்நிலையிலும் அவர்கள் அந்த மக்களிடம் கோபம் கொள்ளவில்லை. இறைவனிடம் சாபம் இடவில்லை. ஏன் கைபர் போரின் போது யூதப் பெண் விஷம் ஏற்றப்பட்ட இறச்சியை விருந்தில் கொடுத்தாள். சில தோழர்கள் மரணித்தார்கள். நபிகளாருக்கு விஷம் வைக்கப்பட்டதை அறிந்தும் அந்தப் பெண்ணை மன்னித்தார்கள். இது போன்று எத்தனையோ சம்பங்கள் அவர்கள் வாழ்வில் உள்ளன. அவர்களது இந்த அழகிய குணத்தைப் பார்த்து பலர் அவர்களது மார்க்கம் உண்மையானது என்று ஏற்றுள்ளனர். மேலும் மற்ற சம்பங்களை அறிய ஷேக் நூஹ் அல்தாஃபி அவர்களின் இந்த வீடியோவைப் பார்க்கவும்.

Leave a Reply