இஸ்லாம் கூறும் பிற சமூக உறவு

இஸ்லாம் கூறும் சட்டங்களில் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று அடியான் அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமை. தொழுகை நோன்பு போன்றன.. இவைகள் தவறும் போது அல்லாஹ் தாராளமாக மன்னிப்பான். இன்னொன்று மற்ற உயிரினங்களுக்கு மனிதர்களுக்கு செய்ய வேண்டியவைகளாகும். இவற்றில் தவறுகள் ஏற்படும் போது யாருக்கு நாம் தவறு செய்தோமோ அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனையுடனே அல்லாஹ் மன்னிப்பையே வைத்துள்ளான். எனவே நாய்க்கு தண்ணீர் கொடுத்தவர் சுவர்க்கம் சென்றதையும் பூனையை கட்டிப் போட்டு உணவு கொடுக்காமல் சாகடித்த பெண் நரகம் சென்றதையும், மரம் நடுவதன் சிறப்பையும், ஒட்டகத்திற்கு சரியாக உணவு கொடுக்காமல் அதிக வேலை வாங்கிய ஸஹாபாவை கண்டித்தையும், குருவி கூட்டில் குஞ்சை பிரித்து தாய்க்கு துன்பம் கொடுத்ததை கண்டித்தையும் ஹதீஸ் மூலம் நாம் அறியலாம். ஆக ஒரு முஸ்லிம் பிற உயிரணங்களுக்கு தீங்கு செய்தாலும் அதனது கடமையில் குறை வைத்தாலும் தண்டிக்கப்படுவான் என்பதை ஹதீஸில் அறியலாம். அதேபோல் தான் மனிதாபிமானமாக மற்ற மனிதர்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் இஸ்லாம் கட்டாயப்படுத்துகிறது. மனிதன் நிறம், இடம், மதம், மொழி போன்றவற்றில் வேறுபட்டாலும் மனிதன் என்ற முறையில் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதை நபிகளாரின் வாழ்க்கையில் பார்க்கலாம். மேலும் விவரம் அறிய ஷேக் இஸ்மாயில் ஸலபி அவர்களின் இந்த வீடியோவைப் பார்க்கவும்…

Leave a Reply