முன்னோர்களின் வாழ்விலிருந்து பெறும் படிப்பினைகள்

அல்லாஹ் ரசூலை முறையாக பின்பற்றிய மற்றும் அல்லாஹ் ரசூலால் பாராட்டப்பட்ட ஒரு சமுதாயம் நமக்கு முன்மாதிரியாக உள்ளது. அவர்களை நாம் பின்பற்றுவதால் இரு உலகிலும் வெற்றி பெறலாம். அவர்கள் தான் நபிகள் ஸல் அவர்களின் தோழர்களான ஸஹாபாக்கள். அந்த வரலாற்றில் நமக்கு பல வழிகாட்டல் மற்றும் படிப்பினைகள் உள்ளன. கஅப் பின் மாலிக் அவர்களின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைப் பார்க்கலாம். தபூக் போருக்கு அழைப்பு வந்த போது ”பேரித்தம் பழம் அறுவடைக்கான சூடான காலம். மேலும் தூரமான பயணம். இந்த சூழலில் கஅப் பின் மாலிக் அவர்கள் நாளை செல்லலாம் என்று தள்ளிப் போட்டு விட்டார்கள். போருக்கு செல்லாமலேயே காலம் கடந்து விட்டது. அகபா உடன்படிக்கையில் கலந்து கொண்டு சுவர்க்கத்திற்கு நன்மாரயம் சொல்லப்பட்ட இந்த ஸஹாபி அவர்களின் மனம் பட்ட வேதனை – நபிகளாரின் கட்டளைக்கு கட்டுப்பட்டு அல்லாஹ்வின் மன்னிப்பிற்காக ஏங்கிய அவர்களின் சம்பவத்தை அறிய ஷேக் அஸ்ஹர் அவர்களின் வீடியோவைப் பார்க்கவும்..

Leave a Reply