குர்ஆன் சுன்னாவை விளங்க சஹாபாக்களின் விளக்கம் அவசியம்

உங்களிடத்தில் இரண்டை விட்டுச் செல்கிறேன். அதை பின்பற்றும் காலமெல்லாம் நீங்கள் வழி தவறமாட்டீர்கள்! ஒன்று அல்லாஹ்வின் வேதம். மற்றொன்று எனது வழிமுறை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆக இன்று இஸ்லாம் என்று கூறுபவர்களும் குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுபவர்கள் என்று கூறுபவர்களும் எதிர் எதிரான விசயத்தைக் கூறுவதை நாம் பார்க்கலாம். இது எப்படி சாத்தியம்? காரணம் குர்ஆன் ஹதீஸை சரியாக அறியாத தன்மையாகும். உதாரணமாக ஒருவர் கப்ரை பூசுவதற்கு குர்ஆனிலிருந்து வித்தியாசமாக தன் இஸ்டத்திற்கு அர்த்தம் எடுத்து விளக்கம் அளிப்பதைப் பார்க்கலாம். சவ்வாஹா என்பதை சமமாக்குவது (இடித்து) என்பதற்கு பதிலாக சரியாக்குவது என்று கூறி கப்ர் வணக்கத்தை ஆதரிக்கின்றார். எனவே குர்ஆன் ஹதீஸை சரியாக விளங்க வேண்டுமெனில் யாரை அல்லாஹ் மற்றும் நபிகளார் ஸல் அவர்கள் மெச்சினார்களோ அந்த ஸஹாபாக்கள் நடந்த வழியைப் பின்பற்ற வேண்டும். தனது பகுத்தறிவுக்கு ஏற்ப மார்க்கததை மாற்றியவர்கள் தான் முஃதஸிலாக்கள், ஜஹ்லியாக்கள், காரிஜியாக்கள், ஷியாக்கள் போன்றவர்கள். இவர்கள் ஸஹாபாக்களை ஏசினார்கள், குறைவாக மதித்தார்கள். இதே போல உள்ள கொள்கையை தமிழகத்தில் ஒரு இயக்கம் கடைபிடித்து வருவதை எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எவர்கள் ஸஹாபாக்களை குறைவாக மதிக்கின்றார்களோ அவர்களை முஸ்லிம் இமாம் மற்றும் பல் அறிஞர்கள் முஸ்லிமாக எடுக்காமல் – முனாஃபிக் என்று கூறுகிறார்கள். மேலும் விவரம் அறிய ஷேக் ஹஸன் அலி உமரி அவர்களின் வீடியோவைப் பார்க்கவும்…

Leave a Reply