ரமலானுக்கு தயாராவோம்!

நபிகளார் ஸல் அவர்கள் ரமளானுக்கு தயாராக ஷஃபான் மாத்திலேயே தொடங்கி விடுவார்கள். அதிகமான நாட்கள் இந்த மாதத்தில் நோன்பு நோற்பவர்களாக இருப்பார்கள். அல்லாஹ் மாதங்களில் சில வித்தியாசங்களை ஏற்படுத்தி ஒன்றை விட மற்றொன்று சிறப்பு மிக்கதாக ஆக்கியுள்ளான். அதே போல் பகல்களில் நகர் நாட்கள் (குர்பானி கொடுக்கப்படும் நாட்கள் ) சிறப்பு பெற்றது போல, இரவுகளில் லைலத்துல் கத்ர் 1000 மாதங்களை விட சிறந்து விளங்குவது போன்று ரமளான் மாதத்தை மிகவும் உண்ணதமானதாக ஆக்கியுள்ளான். காரணம் இந்த மாத்தில் தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டக் கூடிய அல்குர்ஆன் இறக்கப்பட்டுள்ளது என்று அல்லாஹ் தள் திருமறையில் கூறுகிறான். அல்லாஹ்வின் நம்பிக்கை கொண்டு நன்மைகளை எதிர்பார்த்து யார் நோன்பு நோற்கின்றாறோ அவரது முன் பாவங்களை அல்லாஹ் மன்னிக்கின்றான். இதே போல் ரமளானின் இரவில் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு நன்மையை எதிர்பார்த்து வணங்குபவரது முன் பாவங்களை அல்லாஹ் மன்னிக்கின்றான். மேலும் இந்த தலைப்பில் அதிக விவரம் அறிய ஷேக் அப்பாஸ் அவர்களின் இந்த வீடியோவைப் பார்க்கவும்.

Leave a Reply