அபிவிருத்தி அல்லாஹ்வின் அருட்கொடை

இந்த உலகில் அல்லாஹ்வின் அபிவிருத்தி என்பது மிகவும் இன்றியமையானதாகும். அதிகம்,அபிவிருத்தி  ஒன்று போல் தோன்றினாலும் – வேறானவையாகும். அதிகம் சம்பாதிப்பதோ அதிகமாக வாழ்வதோ பரகத் – அபிவிருத்தி ஆகாது. மாறாக குறைவாக சம்பாரித்தாலும் மனநிறைவுடன் சந்தோசமாக வாழ்வதாகும். குறைவான நாட்கள் வாழ்ந்தாலும் நோய் நொடியிலிருந்து சந்தோசமாக வாழ்வதாகும். அல்லாஹ் நபியவர்களுக்கு ”பரகத் பொருந்திய இடத்தில் என்னை இறக்கி வைப்பாயாக” என்று வேண்ட கூறுகிறான். மேலும் அல்லாஹ் தனது திருமறையில் ”ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம். (அல்குர்ஆன் 16:97)” என்று கூறுகிறான். ஆக அபிவிருத்தி என்பது அல்லாஹ் நமக்கு கொடுக்கும் அருட்கொடையாகும். குடும்பத்துடன் சேர்ந்து வாழ்வதும் அபவிருத்தி ஒரு காரணியாகும். மேலும் இது பற்றி அறிய ஷேக் யாசிர் ஃபிர்தௌசி அவர்களின் வீடீயோவைப் பார்க்கவும்..

Leave a Reply