இஸ்லாம் கூறும் குடும்ப வாழ்க்கையும் சமூக சீர்கேடுகளும்

ஒரு சமுதாயம் அவரவர் தன்னை மாற்றிக் கொள்ளாத வரை அல்லாஹ் அவர்களை திருத்த மாட்டான். எனவே நாம் நம்மை மாற்றிக் கொள்ளாத போது இஸ்லாமிய குடும்பவியல் முறை நம்மிடம் வர முடியாது. இதற்கு பல உதாரணங்கள் ஸஹாபிகளின் வாழ்க்கையில் நமக்கு படிப்பினைகள் உள்ளன. அம்ரு பின ஆஷ் ரழி மக்காவைச் சார்ந்த ஒரு சிறந்த ஸஹாபியாகும். அவர்களின் மரண வேளையில் தன் மகன் அப்துல்லாஹ் பின் ஆஷ் அவர்கள் தன் தந்தையிடம் ஏன் அழ வேண்டும் என்று கேட்ட போது அவர்கள் கூறியவற்றை நாம் சிந்திக்க வேண்டும். ”நான் மூன்று கட்டத்தை அடைந்துள்ளேன். முதல் கட்டம் நரகவாதி. இரண்டாம் கட்டம் சுவர்க்கவாதி. தற்போது நிலையை நான் அறியவில்லை.” என்று கூறி பின்வருமாறு கூறினார்கள் ”முதலில் காபிர்களுடன் இருந்தேன். அன்று அபிசீனியாவிற்கு ஹிஜ்ரத் சென்றவர்களுக்கு எதிராக மன்னரிடம் சென்ற குழுவின் தலைவராகச் சென்றேன். ஆனால் ஹிஜரி 7 ஆண்டிற்கு பின் தன்னை மாற்றிக் கொண்டு இஸ்லாத்தை ஏற்றேன். ஆனால் இஸலாத்தை ஏற்பதற்கு முன் நபிகளாரிடம் ”எனது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுமானால் இஸ்லாத்தை ஏற்பேன்” என்று உறுதி பெற்று இஸ்லாத்தை ஏற்றேன். இந்த நிலையில் மௌத்தாகினால் சுவர்க்கவாதியாக இருந்திருப்பேன். ஆனால் அதன் பின உமர் ரழி அவர்கள் காலத்தில் பல பிரதேசத்திற்கு கவர்னராக இருந்த சமயத்தில் தெரிந்தோ தெரியாமலே மனிதன் என்ற முறையில் தவறு செய்திருப்பேனே. அந்த பாவத்தை நினைத்து அழுவதாக தன் மகனிடம் கேட்டு கூறினார்கள். எனினும் தன் மகனிடம் அடக்கம் செய்த பின் தனக்காக அல்லாஹ்விடம் பாவத்திற்காக துவா செய்யக் கூறினார்கள். அவர் மக்கத்து காஃபிர்களுடன் இருந்து கொடிய செயல்கள் செய்த ஒருவர் எவ்வாறு மாற்றத்தை விரும்பினார் என்றும் அவருக்கு எப்படி வெற்றி கிட்டியது என்பதும் நமக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். மேலும் விவரங்கள் அறிய ஷேக் அலி அக்பர் உமரி அவர்களின் இந்த வீடியோவைப் பார்க்கவும்.

Leave a Reply