தர்கா-இஸ்லாமிய கொள்கையா?

நாம் அவ்லியாக்கள் என்று கூறுபவர்கள் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் நாடினால் அவ்லியா அல்லாவாக இருக்கலாம். ஆனால் இவர்கள் அல்லாஹ் போன்று சக்தி பெற்றவர்களா என்பது கேள்வி? நம்மில் பலர் இவர்கள் நல்லடியார்கள்.. இவர்கள் எங்களுக்காக அல்லாஹ்விடம் கேட்பார்கள் தவிர நாங்கள் இவர்களிடம் வேண்டுவது இல்லை” என்கிறார்கள். அதற்கு உதாரணமும் தருகிறார்கள். ஒரு கேஸை ஜட்ஜிடம் எடுத்துச் சொல்லஎ்பபடி ஒரு வக்கீல் தேவையோ அது போல இவர்கள் எங்களுக்கு உதவுகிறார்கள் என்கிறார்கள். சற்று சநி்தித்தால் குறிப்பிட்ட சில அறிவு, சக்தி மட்டுமே உள்ள ஒரு ஜட்ஜோடு அல்லாஹ்வை ஒப்பிடுவது எவ்வளவு பெரிய ஆபத்தானது என்பதை அறிய மாட்டார்கள். அல்லாஹ்வுக்கு யாரையும் ஒப்பிடக் கூடாது என்பதும் அவனைப் போன்று எதுவுமே இல்லை என்பதையும் மறக்கடிக்கச் செய்து விட்டது தவறான சிந்தனை – வழிகாட்டல்.. மேலும் இது பற்றி அறிய ஷேக் அப்துல் பாசித் அவர்களின் வீடியோவைப் பார்க்கவும்.

Leave a Reply